ஏடிஎம் சென்டரில் கார்டை தவறவிட்டவரிடம் ரூ. 20,000 லபக்
சென்னை:
சென்னையில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிம் சென்டரில் ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற டெபிட் கார்டை பயன்படுத்தி ரூ.20,000த்தை சுட்ட காவலர் சிக்கினார்.
பாண்டிபஜாரைச் சேர்ந்த ரமணன் என்பவர் தி.நகரில் உள்ள ஐசிஐசிஐ ஏடிம் சென்டரில் சென்று பணம் எடுத்தார். இதையடுத்துதனது கார்டை எடுக்க மறந்துவிட்டார். வீட்டுக்குச் சென்றவுடன் அவருக்கு கார்டு நினைவு வரவே உடனடியாகத் திரும்பி வந்தார்.ஆனால், அங்கே கார்டு ஏதும் இருக்கவில்லை என ஏடிஎம் சென்டரின் காவலர் கூறினார். இதையடுத்து ஐசிஐசிஐ வங்கியைத்தொடர்பு கொண்டு கார்டை பிளாக் செய்யக் கோரினார். ஆனால், அதற்குள்ளாக கார்டை பயன்டுத்தி அவரது கணக்கில் இருந்துரூ. 20,000 திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் ரமணம் புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார்,அந்த ஏடிஎம் சென்டரில் இருந்த குளோஸ் சர்க்யூட் கேமராவில் பதிவான வீடியோவை ஆய்விட்டனர்.
அப்போது ரமணன் வந்துவிட்டுப் போனவுடன் அந்த சென்டரின் காவலாளி மெசினுக்கு அருகே சென்று அந்த கார்டைப்பயன்படுத்தி ரூ. 20,000த்தை எடுப்பது வீடியோவில் தெளிவாக பதிவாகிவிட்டது.
சிக்கிக் கொண்ட அந்தக் காவலாளி கைதாகிறார். வேலியே பயிர்களை மேய்வது மாதிரி செயல்படும் ஏடிஎம் சென்டர்காவலாளிகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.
கார்ட் தொலைந்தாலோ, தவறவிட்டாலோ அடுத்த நிமிடமே அதை பிளாக் செய்ய வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்.அதற்கான தொலைபேசி எண்ணை நினைவில் வைத்திருங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications