பழைய கேள்வி தாளுக்கு 3 மணி நேரம் பதில் எழுதிய பி.காம் மாணவர்கள்!!!!!
நெல்லை:
நெல்லை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் குளறுபடி நடந்ததால் மாணவர்கள் கொதிப்படைந்தனர்.
இப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடந்து கொண்டுள்ளது.ஒரு கல்லூரியில் ஒரே அறையில் பிகாம் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வுஎழுதினார்கள்.
இதில் பிகாம் மூன்றாமாண்டு ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் 7 பேருக்கு 2003ம் ஆண்டுக்கான பழைய கேள்வித்தாள் தரப்பட்டது. அவர்களும் அதை கவனிக்காமல் 3 மணி நேரம் தேர்வு எழுதினர்.
பிறகு தான் மாணவர்களுக்கு கேள்வித்தாள் மீது சந்தேகம் எழுந்தது. இது பற்றி தேர்வு மேற்பார்வையாளரிடம்கூறினார்கள். அப்போது தான் தேர்வில் குளறுபடி நடந்திருப்பது தெரியவந்தது.
இதனால் தேர்வு அறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கல்லூரி முதல்வர் அங்கு வந்து மாணவர்களைசமாதானப்படுத்தினார். மறு தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் கேட்ட போது, கேள்வித்தாள் மாறியது உண்மைதான். எங்கள் மீது தவறில்லை.முதலிலேயே மாணவர்கள் இதை கவனித்திருக்க வேண்டும். 3 மணி நேரம் தேர்வு எழுதிய பிறகு தான் அவர்கள்கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இது பற்றி நாங்கள் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். இனிஅவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications