நட்டாற்றில் தவிக்கும் கராத்தே
டெல்லி:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜனை காங்கிரஸ் கட்சியும் சேர்த்துக் கொள்ள தயக்கம்காட்டுவதால் நட்டாற்றில் தவிக்கிறார் காரத்தே.
சென்னையிலிருந்து திடீரென தலைமறைவான கராத்தே டெல்லியில் தங்கியிருந்து காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சிசெய்து வந்தார். அதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரிடம் முறைப்படி விண்ணப்பம் அளித்தார்.அது தொடர்பாக அம்பிகா சோனி, மோதிலால் வோரா, அகமது படேல் ஆகிய மூவர் குழு பரிசீலித்தது. அப்போதுஅக்குழு பல கேள்விகளை எழுப்பியது.
அதிமுகவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? உங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்எப்படிப்பட்டவை. அதில் உண்மை இல்லை என்றால் இவ்வளவு நாட்கள் தலைமறைவாக இருப்பது ஏன்?
அதிமுக தலைமையுடன் மோதல் ஏற்பட உண்மையான காரணம் என்ன என்று கராத்தேவிடம் கேட்டது. ஆனால்எந்த கேள்விக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும், நம்பத்தகுந்த வகையிலும் அவர் பதலளிக்கவில்லைஎன்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஏற்கனவே காங்கிரஸில் இருந்து சென்றவராக இருந்தாலும் கூட தற்போது அவர் மீதான நம்பகத்தன்மைமுற்றிலும் போய்விட்டது. மாநில காங்கிரஸ் தலைமையும் அவரை கட்சியில் சேர்க்க பரிந்துரை செய்யவில்லை.
அவரை கட்சியில் சேர்த்தால் உள்கட்சியில் பிரச்சினை ஏற்படுத்திவிடும் என்றும் தேர்தல் நேரத்தில் இந்தபிரச்சினை தலைவலியாக ஆகிவிடக்கூடாது என்றும் காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தியையே கட்சியில் சேர்த்துக் கொள்ள கட்சி மேலிடம் 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று தமிழகத்திலிருந்து தினசரி நூற்றுக் கணக்கானகடிதங்கள் வருகின்றன. அதுவும் மேலிடத்தின் தயக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் எத்தனை மாதங்கள் ஆனாலும் காங்கிரஸில் சேர்ந்த பிறகே சென்னை திரும்பப் போவதாக கராத்தேகூறியிருப்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications