துண்டு போடும் திண்டிவனம்: கருணாநிதி கிண்டல்
சென்னை:
வாரிசு என்று திட்டமிட்டு யாரையும் உருவாக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வார இதழுக்கு கருணாநிதி அளித்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:
கேள்வி: அண்ணாவிடம் பிடிக்காத விஷயம்?
பதில்: பெரிய விஷயம் ஒன்றுமில்லை. பொடி விஷயம்
கே: உங்கள் அடுத்த வாரிசு யார்?
ப: வாரிசு என்று திட்டமிட்டு யாரையும் தயாரிப்பதில்லை. வானவில் போல் தானே தோன்றுவதைத் தடுப்பதுமில்லை.
கே: எப்போதும் உற்சாகமாக இளமையாக இருக்கிறீர்களே எப்படி?
கே: தமிழனிடம் உள்ள பெரிய குறை என்ன?
ப: தன்னுடைய தலையில் தானே மண்ணை போட்டுக் கொள்வது
பதில்: இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக கருதுவதால் எப்போதும் உற்சாகமாக இருக்க முடிகிறது. திறமையும் நீடிக்கிறது.
கே: ஏன் அரசியல்வாதி ஆனோம் என்று என்றாவது கவலைப்பட்டதுண்டா?
ப: மக்கள் பணியில் ஈடுபட்டவனுக்கு அவனது இலட்சிய பயணத்தை எளிதாக்கிட, அரசியல் என்ற வாகனம் கிடைத்ததும்மகிழ்ச்சி அடைவானே தவிர கவலைப்பட மாட்டான்.
கே: வரும் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன?
ப: வகுக்கும்போது தெரியும்
கே:கராத்தே?
ப: கற்றுக் கொண்டதில்லை!
கே: பெரிய கட்சிகளை கூட்டணியில் வைத்திருக்கிறீர்கள். தொகுதி பங்கீட்டு சிக்கலை எப்படி தீர்க்கப் போகீறீர்கள்?
ப: நான் பிறந்த ஊரே சிக்கலுக்கு பக்கத்தில் தானே இருக்கிறது. அதனால் சிக்கல் ஒன்றும் ஏற்படாது.கே: உங்கள் வாழ்வை திரும்ப பார்க்கும் போது சில காரியங்களை இப்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வெற்றிகரமாகஇருந்திருக்கும் என்று தோன்றுகிறதா? உதாரணமாக எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்காமல் இருந்தால்?
ப: ஒரு கட்சியின் தலைமைக் கழக பொருளாளர் திமுக பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயங்களை பொதுக் கூட்டங்களில்திட்டமிட்டுப் பேசியது, திமுகவிலிருந்து தன்னை விலக்க வேண்டும் என்பதற்காகத் தான். அப்படி அவர் நினைத்தது தான்நடந்ததே தவிர நாங்கள் யாரும் அவரை கழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை.
எம்ஜிஆர் புதுக்கட்சி தொடங்கிய பிறகு அக் கட்சியில் கட்டுப்பாடு மீறியவர்களை அவரே நடவடிக்கை எடுத்து விலக்கியநிகழ்ச்சிகள் நிரம்ப உண்டு.
கே: துண்டு போடாத திமுககாரர் எனப்படும் திண்டிவனம் ராமமூர்த்தி கூட உங்களை எதிர்க்கிறாரே?
ப: இப்போது துண்டு போட நினைக்கிறார் போலும்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications