குஷ்பு கைதாவாரா?
சென்னை:
குஷ்புவுக்கு எதிராக மேட்டூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் கிடைத்ததும் அவரை கைது செய்ய நடவடிக்கைஎடுப்போம் என்று சென்னை கமிஷனர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கனவு கன்னியாக திகழ்ந்த குஷ்பு ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பெண்களின்கற்பு பற்றி தவறான கருத்து வெளியிட்டார். திருமணமாவதற்கு முன் பெண்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதுதவறல்ல. பால்வினை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இப்படி சொன்ன கருத்துக்காக தான் வெட்கப்பட வில்லை என்றும் சமீபத்தில் குஷ்பு கூறியிருந்தார். இதற்கு நடிகைசுகாசினியும் ஒத்து ஊதினார்.
தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில்அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே மேட்டூர் நீதிமன்றத்தில் பாமகவை சேர்ந்த சட்ட பாதுகாப்பு குழு வழக்கறிஞர் முருகன் தொடர்ந்தவழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி குஷ்புவுக்கு மாஜிஸ்ரேட்டு ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால்அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கும்படி குஷ்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்ரேட்டுஸ்ரீதர் தள்ளுபடி செய்தார். குஷ்பு மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
குஷ்பு மீது பிறப்பித்துள்ள பிடிவாரண்ட் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி சென்னை நகரபோலீஸ் கமிஷனர் நடராஜுக்கும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.இது குறித்து சென்னை கமிஷனர் நட்ராஜ் கூறியதாவது::
குஷ்பு மீதான பிடிவாரண்ட் உத்தரவு இதுவரை எங்களுக்கு வரவில்லை. உத்தரவு வந்ததும் அதில் இருப்பதை சட்டநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிடிவாரண்ட் கிடைத்தவுடன் குஷ்புவை கைது செய்து சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்றார்.
பிடிவாரண்ட் உத்தரவு இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications