தெருவில் பெற்றெடுத்த குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியாம்பட்டி கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்குநடுரோட்டில் பிரசவம் நடந்தது. நடுத் தெருவில் பெண் குழந்தையை பெற்றெடுத்த அவர் குழந்தையுடன்தற்கொலைக்கு முயன்றார்.

அம்மாசி என்ற விவசாயியின் மனைவி பழனியம்மாள் (வயது 30). சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.

பழனியம்மாள் அங்குள்ள கோவிலில் தங்கிவந்தார். கர்ப்பமாக இருந்த பழனியம்மாள் அந்த பகுதியில் உள்ளவீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்.

இந் நிலையில் பழனியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கோவில் அருகில் தெருவிலேயே அவர் அழகான பெண்குழந்தை பெற்றெடுத்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பழனியம்மாளுக்கு உதவினர்.

பழனியம்மாளுக்கு குழந்தை பிறந்த செய்தி அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரும்பழனியம்மாளை சந்திக்க வரவில்லை.

பசியாலும், களைப்பாலும் அவதிப்பட்ட அவர், விரக்கியடைந்து பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்துதற்கொலைக்கு முயன்றார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி விட்டனர். இப்போது அவர் ஓமலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+