லட்சம் பேருக்கு வேலை: கூவி அழைக்கும் திருப்பூர்
திருப்பூர்:
"ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லையே... என இளைஞர்கள் தவித்து வரும் நிலையில், "எத்தனை பேருக்கு வேலை வேண்டும்?என கேட்கிறது "டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் நகரம்.
தரமான பின்னலாடை ஏற்றுமதி மூலம் உலக வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது திருப்பூர். ஆண்டுக்கு ஆறாயிரத்து500 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் மூன்றாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு உற்பத்தி வர்த்தகம்புரிந்து வரும் இந்த பின்னலாடை நகரத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்,பெண் தொழிலாளர்கள்பணிபுரிந்து வருகின்றனர்.ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழிலாளர் தேவையும் அதிகரித்து வருகிறது.
இங்குள்ள "புது திருப்பூர் எனும் பகுதியில் துவங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவில் சர்வதேசத்தரத்தில் 54 நிறுவனங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களில் பணிபுரிவதற்கு எட்டு ஆயிரம் தொழிலாளர்கள்உடனடியாகத் தேவைப்படுகின்றனர்.
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்ற தொழிலாளர்களில் 60 சதவீத தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பாமல்உள்ளனர். குறிப்பாக, பிரின்டிங், டையிங் நிறுவனங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நகரில் உள்ள மின் கம்பங்கள், சுவர்கள், பஸ், ரயில் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் "ஆட்கள் தேவை விளம்பரங்கள்அதிக அளவில் காணப்படுகின்றன.
ஏற்றுமதியாளர் டீலக்ஸ் ரகுபதி சம்பத் கூறுகையில், ""ஆடைத் தயாரிப்பு ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொருநிறுவனத்திலும் உற்பத்தி பிரிவுக்கு குறைந்தது 30 பேராவது தேவை. எங்கள் நிறுவனத்துக்கு மட்டும் 100 பேர் தேவை.
இவ்வாறு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஒட்டுமொத்த திருப்பூருக்கும் ஒரு லட்சம்தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பது உத்தரவாதம். தகுதி,திறமைக்கேற்ப ஆறு மாதத்தில் ஐந்து ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்கலாம், என்று கூறினார்.
படித்தவர்கள், படிக்காதவர்கள், முன் அனுபவம் உள்ளவர்கள், வேலைக்கு புதியவர்கள் அனைத்து தரப்பினருக்கும் திருப்பூரில்வேலைகள் காத்திருக்கின்றன. ஆகவே, வேலை கிடைக்கவில்லை என்ற கவலை இனி வேண்டாம். திருப்பூர் வரவேற்கத் தயாராகஇருக்கிறது என்கிறார்கள் பின்னலாடை தொழில் துறையினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications