நீதித்துறைக்கு இது சோதனை காலம்: தலைமை நீதிபதி ஏ.பி.ஷா
சென்னை:
நீதித்துறைக்கு இப்போது சோதனைக் காலம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாகூறினார்.
புதிய நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி ஏ.பி.ஷாவுக்கு உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடந்தது. இதில்பேசிய அவர் கூறியதாவது:புகழ் மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் நான் பெருமை அடைகிறேன்.பாரபட்சமின்றி தீர்ப்புகள் வழங்கி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அது மட்டுமின்றி நிர்வாகத் துறையினர் நீதித் துறையில் குறுக்கிடக் கூடாது என்பதையும்உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், சட்டத்தின் ஆட்சியையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பேதிருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் குறைகளை உடனே தீர்க்காவிட்டால், அரசு மீது மக்களுக்குநம்பிக்கை குறைந்து விடும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டை மன்னன் காப்பான். குறையின்றி நீதி வழங்கப்பட்டால் அந்த நீதியானது மன்னனைக் காக்கும் என்றும்திருவள்ளுவர் கூறியுள்ளார்.
நம் நாட்டில் தற்போது நீதித்துறைக்கு சோதனையான காலமாகும். ஏற்கனவே ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளநிலையில் மேலும் அதிகமாகத் தொடரப்படும் வழக்குகளையும் நீதிமன்றம் சந்திக்க வேண்டியுள்ளது.
இன்னும் பல மடங்கு வழக்குகள் தாக்கலாகும். தொழில்மயமாக்கம், மக்கள் தொகைப் பெருக்கம், மக்களின்தேவை அதிகரிப்பு, தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், பொருளாதார உலக மயமாக்கல் ஆகியவை காரணமாகசமூக மற்றும் சட்டப் பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தான் மக்களின் இறுதி நம்பிக்கையாகத் திகழ்கின்றன. இதனால்சென்னை உயர்நீதிமன்றத்தின் மேன்மையை நாம் காக்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications