வெளிநாட்டில் வேலை: 700 பேரிடம் ரூ. 7 கோடி மோசடி- 3 மலையாளிகள் கைது
கோவை:
வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 700 தமிழக, கேரள இளைஞர்களிடம் ரூ. 7 கோடி வரை வசூலித்துவிட்டுஏமாற்றிய கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையை மையமாகக் கொண்ட ஒரு டிராவல் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சி கோவையில் தனது கிளையைத் திறந்தது. இதைநடத்தியது மலையாளிகள். வளைகுடா உள்ளிட்ட வெளி நாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக இவர்கள்விளம்பரம் செய்தனர்.இதை நம்பிய தமிழக, கேரள இளைஞர்கள் இந்த ஏஜென்சியைத் தொடர்பு கொண்டனர். அவர்களை அவர்களது வசதிக்கு ஏற்பஏமாற்றினர் இந்த ஏஜென்சியை நடத்திய மலையாளிகள்.
ஒவ்வொருவரிடம் இருந்து தலா ரூ. 50,000 முதல் ரூ. 2.25 லட்சம் வரை வசூல் செய்தது இந்தக் கும்பல். இதையடுத்துஇவர்களுக்கு கால் லெட்டர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் நேர்முகத் தேர்வுக்காக கோவை வருமாறு கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த 700 பேரும் கோவைக்கு வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது இந்த நிறுவனத்தின் அலுவலகம்மூடப்பட்டிருந்தது. மாலை வரை திறக்கப்படவில்லை.
சந்தேகமடைந்த வாலிபர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் இந்தஏஜென்சியை நடத்தியவர்களோடு தொடர்பு வைத்திருந்த 5 பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சத்தைமீட்டனர்.
இந்த 5 பேரும் தந்த தகவல்களை வைத்து கேரளாவுக்கு விரைந்த தமிழக போலீஸ் சிறப்புப் படை பாலக்காட்டில் வைத்து 2பேரையும் கோட்டயத்தில் பதுங்கியிருந்த ஒருவரையும் இன்று கைது செய்தனர். இவர்கள் தான் இந்த ஏஜென்சியை நடத்திவந்தவர்கள்.
இவர்களிடம் இருந்து பணம், நகை, வீட்டு, நில பத்திரங்கள் என ரூ. 20 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டுள்ளது. இவர்களிடம்விசாரணை நடத்தப்பட்டதில் ஏஜென்சியின் உரிமையாளர் மும்பையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவனைப் பிடிக்கதனிப்படை விரைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications