3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு
சென்னை:
ஒரு குழந்தையின் கொலையை மறைத்ததாக குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு புதிய வழக்கு ஒன்றைதொடர்ந்துள்ளது.
சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வி. சிறுத்தைகள் மாநில மாணவரணித் துணைச் செயலாளர்ரவிசந்திரன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.அதில், கடந்த 2004ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பு கலந்துகொண்டிருக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரின் 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டு குளியறையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தை குழந்தையின் பெற்றோரும், ஓட்டல் நிர்வாகத்தினரும் மறைத்துவிட்டனர். போலீசில் புகார் ஏதும்கொடுக்கவில்லை. இந்த விவரம் தெரிந்த குஷ்புவும் கூட அதை போலீசுக்குச் சொல்லவில்லை.
இதைபற்றி கடந்த 2004ம் ஆண்டு பிரபல வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த குஷ்பு, குழந்தையின் கொலைச் சம்பவம்பற்றி குறிப்பிட்டு அந்த சம்பவம் மனதளவில் என்னை மிகவும் பாதித்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் நிருபர்கள் கேட்டபோது, குழந்தை கொலை பற்றி பெற்றோரோ, ஓட்டல்நிர்வாகத்தினரோ புகார் ஏதும் கொடுக்கவில்லை. அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறிவிட்டார்.
குழந்தை கொலை பற்றி குஷ்புவுக்கு தெரியும். இதனால் தான் அது பற்றி வாரப்பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஆனால்கொலை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துள்ளார்.
குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 39ன் படி கொலையை நேரில் பார்த்தவர் அதுபற்றி உடனே போலீசுக்கு தகவல்தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காவிட்டால் அது இபிகோ 201,202,203 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே இது தொடர்பாக நடிகை குஷ்புவிடம் விசாரணை நடத்தி, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கு ஆதாரமாக வாரப் பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியின் நகலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இன்னொரு விவகாரத்தில் குஷ்பு மாட்டியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications