இந்த வாரம் மத்திய அமைச்சரவை மாற்றம்
டெல்லி:
மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும்ஆலோசனை நடத்தினர்.
இருவரும் சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த வாரத்தில் மத்தியஅமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதலைவர் சிபு சோரனுக்கு மீண்டும் பதவி அளிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி, முன்னாள் கேரள முதல்வர் ஏ.கே. ஆண்டனிஅல்லது கேரளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் வயலார் ரவி, முன்னாள் ஒரிஸ்ஸா முதல்வர் கிரிதர் காமாங் அல்லது அம்மாநில மூத்த தலைவர் சந்திரசேகர் சாகு,
அஸ்ஸாமைச் சேர்ந்த கொலம் ஒஸ்மணி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடி, குருதாஸ் காமத் ஆகியோருக்குஅமைச்சரவையில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.
சோனியா தனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று கூறியதையடுத்து தானும் அமைச்சர் பதவியேற்க மறுத்தவர் அம்பிகா சோனிஎன்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கனரகத் தொழில்துறை இணை அமைச்சராக உள்ள அஸ்ஸாமைச் சேர்ந்த சந்தோஷ் மோகன் தேவ் மற்றும் அறிவியல்தொழில்நுட்பத்துறை இணையமைச்சராக உள்ள கபில் சிபல் ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்து ராஜினமா செய்துவிட்டு காஷ்மீர் முதல்வரான குலாம்நபி ஆசாதுக்குப்பதிலாக காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
இவர்கள் தவிர மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மோசினா கித்வாய், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா,ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிராமி ரெட்டி, கே.எஸ்.ராவ், ரஷீத் ஆல்வி, இளைய காங்கிரஸ் தலைவர்களானபவன்குமார் பன்சால், அஸ்வினி குமார் ஆகியோரும் பதவிகள் கேட்டு வருகின்றனர்.
மேலும் மகாராஷ்டிர ஆளுநராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா தனக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டு வருகிறார். அதேபோல முன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜீத் ஜோகியும் பதவி கேட்கிறார்.
குலாம்நபி, சிபு சோரன் தவிர ஜெகதீஷ் டைட்லர் விலகியது (சீக்கியர்கள் படுகொலை வழக்கில் பதவி விலகியவர்),விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் தத் மரணமடைந்தது, நட்வர் சிங் பதவி விலகியது (வோல்க்கர் அறிக்கையால்) எனமத்திய அமைச்சரவையில் சுமார் அரை டஜன் பதவிகள் காலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இளங்கோவன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் செயல்பாட்டில் பிரதமருக்கு திருப்தியில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அமைச்சரவை மாற்றத்தின்போது சில அமைச்சர்களுக்கு அதிர்ச்சிகளும் காத்திருப்பதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications