சென்னை வெடி விபத்து: குண்டு சப்ளை பெண் கைது
சென்னை:
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்த வெடி விபத்து வழக்கில் வெடிபொருட்களை சப்ளை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை மேற்கு மாம்பலம் சம்பங்கிரெட்டி தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ். சினிமாவில் பயன்படுத்தப்படும் போலிகுண்டுகள் தயாரித்து வந்தார். இவர் தயாரித்த குண்டுகள் சந்திரமுகி படத்தில் கூட வெடித்து சிதறுவது போல்பயன்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவர் தயாரித்த போலி குண்டுகள் வெடித்து இவரது வீடு இடிந்து தரை மட்டாகிவிட்டது. இதில்3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக துணை கமிஷனர் முருகன் உத்தரவின் பேரில் குமரன் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார்வழக்குபதிவு செய்து விசாரித்தார். வெடிப் பொருட்களை கவனக்குறைவாக பயன்படுத்தியதாக ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் வெடி பொருட்களை ராஜேஸ்வரி (வயது 55) என்ற பெண் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.மேற்கு தாம்பரத்தை சேர்ந்த இவர் திருநீர்மலையில் உள்ள கல்குவாரியில் இருந்து வெடி மருந்துகளை திருடி ரமேஷ்க்கு சப்ளைசெய்துள்ளார்.
இதனால் ராஜேஸ்வரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் வெடி விபத்து:
இதற்கிடையே சேலத்தில் விநாயகா பார்மஸி கல்லூரியில் படித்து வரும் கென்ய நாட்டைச் சேர்ந்த மாணவியின் வீட்டில் நடந்தவெடி விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சேலம்-ஏற்காடு சாலையில் முயல் நகர் பகுதியில் கென்யாவைச் சேர்ந்த பெபி என்ற மாணவியின் வீட்டில் இந்த வெடி விபத்துஏற்பட்டது. இதில் வீடே தரைமட்டமாகிவிட்டது.
இது குறித்து பெபியிடமும் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கென்யாவைச் சேர்ந்த பிற மாணவர்களிடம் விசாரணைநடக்கிறது. இவர்களுக்குள் ஏதாவது மோதல் ஏற்பட்டு வெடி வைக்கப்பட்டதா என்றரீதியில் விசாரணை நடக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து கென்ய தூதரகத்துக்கும் தகவல் தரப்பட்டு, பெபி குறித்த பின்னணி விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றனர். மேலும் இடிந்து விழுந்த கட்டட சேதத்தில் ஒட்டியுள்ள வெடிமருந்தின் தன்மையை அறிய துகள்கள் சென்னை,கோவை, பெங்களூரில் உள்ள தடயவியல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications