சுயநிதி கல்லூரி இட ஓதுக்கீடு: மனித வளத்துறை Vs
டெல்லி:
சுயநிதி கல்லூரி இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவில் புது குழப்பம் உருவாகியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய சுகாதாரத்துறை தனி மசோதா ஒன்றை தயாரித்துள்ளது.
அகில இந்திய அளவில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, அரசு ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் குறித்துமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இரண்டு சட்ட திருத்தங்களை தயாரித்து, வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில்அறிமுகப்படுத்தவுள்ளது.இந் நிலையில், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய சுகாதாரத் துறையும் தனியாக ஒருபுதிய சட்ட மசோதாவை உருவாக்கியுள்ளது. இந்தத் துறையின் அமைச்சராக இருப்பது பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ்என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறையின் இந்த மசோதா அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 30ம்தேதிக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டம் மருத்துவ,துணை மருத்துவ படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத் துறை தயாரிக்கும் சட்டம் பொறியியல், கட்டடக் கலை உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை நடத்தும்கல்லூரிகளுக்கு பொருந்தும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை தயாரித்துள்ள புதிய சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, சிறுபான்மை மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 30 சதவீதமாகவும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீதமாகவும் இருக்கும். கல்லூரியில்உள்ள மொத்த இடங்களில் 75 சதவீதம் பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும்.
15 சதவீதம் வெளிநாட்டு இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 10 சதவீதம் எப்படி நிரப்பப்பட வேண்டும்என்று குறிப்பிடப்படவில்லை. இதனால் மாநில அரசுகள் குழப்பத்தில் சிக்கியுள்ளன. வெளி மாநில மாணவர்களை சேர்க்கும்பொறுப்பு மாநில அரசுகளுக்கு விடப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் ஏற்கனவே மசோதா தயாரிக்கப்பட்டு சுற்றுக்கும் அனுப்பப்பட்டது. மாநில அரசுகள் அதில்கருத்து தெரிவித்து முடிந்த நிலையில் தற்போது சுகாதாரத் துறை சார்பில் புதிய மசோதா தயாரிக்கப்பட்டு அனுப்பியிருப்பதால்குழப்பமே மிஞ்சியுள்ளது. இதற்கு பதில் சொல்லப் போவதில்லை என்று தனியார் கல்லூரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த மசோதா மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும் மத்திய சுகாதாரத் துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுஇருப்பது தெரிகிறது என்றும் கல்லூரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications