அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் அவதிப்பபட்டுவருகின்றனர்.

பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

ஆனால் கடந்த 2 நாட்களாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும்அவதிப்படுகின்றனர். இதனால் அறுவை சிகிச்சைகள் செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சென்னையை அடுத்த மணலியில் இருந்து தான் கொண்டுவரப்படுகிறது. சென்னையில் பெய்த பலத்த மழையால் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்குள் வெள்ளம் புகுந்தது.இதனால் உற்பத்தியில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேவையான அளவு சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு வந்து சேரவில்லை. ஆனால், இதற்கு மாற்று ஏற்பாடு செய்யமருத்துவமனை நிர்வாகம் தவறிவிட்டதே பிரச்சினைக்கு காரணம் என்று மருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

பெண் டாக்டரின் பேரம்:

இதற்கிடையே திருத்தணி அரசு மருத்துவனையில் ஆபரேஷன் செய்வதற்கு ரூ. 10,000 கேட்டதாக அரசு பெண் டாக்டர் மீது பெண் நோயாளி புகார்கூறியுள்ளார்.

திருத்தணி எம்ஜிஆர் நகரை சேர்ந்த காமேஷ் என்பவரின் மனைவி சரசா (வயது 25). கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் 2வது குழந்தை பிறந்ததும் குடும்பகட்டுப்பாடு செய்ய திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது மருத்துவமனையில் இருந்த ஒரு பெண் புரோக்கர் சரசாவை அணுகி ரூ. 1,500 கொடுத்தால் நான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யஏற்பாடு செய்கிறேன் என கூறி பணத்தை வாங்கிக் கொண்டார்.

பின்னர் அரசு டாக்டர் ஆயிஷா சரசாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ஒன்றரை மாதத்துக்கு பிறகுசரசாவின் வயிற்றில் வலி ஏற்பட்டது.

எனவே சரசா மீண்டும் திருத்தணி மருத்துவமனைக்கு சென்று தனக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஆயிஷாவிடம் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாககூறினார்.

ஆனால் டாக்டர் ஆயிஷா மீண்டும் ஆபரேஷன் செய்தால் தான் என்ன கோளாறு என்று கண்டு பிடிக்க முடியும். அதுவும் இங்கு ஆபரேஷன் செய்ய இயலாது. ரூ.10,000 கொடுத்தால் தனியார் மருத்துவமனையில் வைத்து ஆபரேஷன் செய்கிறேன் என கூறியுள்ளார்.

இதற்கு சரசாவின் கணவர் தங்களால் இவ்வளவு பெரிய தொகை தர முடியாது என்று மறுக்கவே டாக்டரும் வேறு எதுவும் என்னால் செய்ய முடியாதுஎன்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சரசா அரசு மருத்துவமனையில் தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மாவட்ட சுகாதார துறை இணைஇயக்குனர், கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

நமது அரசு மருத்துவமனைகளின் நிலைக்கு இந்த இரண்டு செய்திகளும் சின்ன உதாரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+