தொழிலாளர் சட்டத்தின் கீழ் சாப்ட்வேர் ஊழியர்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சாப்ட்வேர், பிபிஓ துறைகளில் பணியாற்றும் ஊழியர்களையும் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கொண்டு வர மத்திய அரசுஉத்தேசித்துள்ளது.
சாப்ட்வேர் துறையில் ஊழியர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், ஊழியர்கள் யூனியன் அமைக்க அனுமதிக்க வேண்டும்என்றும், தொழிலாளர் நலச் சட்டங்களின்படி அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்குஇடதுசாரிக் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.ஆனால், இதை சாப்ட்வேர் நிறுவனங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் சாப்ட்வேர் துறையில் உள்ள ஊழியர்களின் கருத்துஎன்ன என்பது தெரியவில்லை. அது தொடர்பாக இதுவரை சர்வே ஏதும் நடத்தப்படவும் இல்லை.
இந் நிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் சகானி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம்அனுப்பியுள்ளார். அதில்,
தொழிலாளர் நலச் சட்டங்கள் முறைப்படி அமலாக்கப்படுகின்றனவா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.சாப்ட்வேர் துறையில் இந்த சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications