தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவல்: சிறைகளுக்கு பாதுகாப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் சிறைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிளை சிறைகளில் உள்ளூர் போலீசார் ஆயுதம் தாங்கிபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிகார் சிறையில் தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள், அங்கிருந்து 341 பேரை விடுவித்தனர். இதே போல மற்ற மாநிலங்களிலும்நகஸல்கள் தாக்குதல் நடக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து சிறைகளில் பாதுகாப்பைபலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தமிழக எல்லைப் பகுதிகளில் பலத்த கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. தமிழக சிறைகளிலும் பாதுகாப்பும்கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிகார் சிறை மீது நடந்த தாக்குதலில் சுமார் ஆயிரம் நக்ஸல்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் கூட இதுவரைபிடிபடவில்லை. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க மத்திய தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் சகிதம் தீவிர தேடுதல் வேட்டை நடப்பதால் இந்த நக்ஸலைட்டுகள் தென் மாநிலங்களுக்குள் ஊடுருவலாம் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள நக்ஸல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி,ஓசூர், ஊத்தங்கரை, தர்மபுரி, அரூர் ஆகிய கிளை சிறைகளில் உள்ளூர் போலீசார் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.
ஊத்தங்கரையில் நக்சல்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போது போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் நக்சல் தலைவர்சிவா என்கிற பார்த்திபன் சுட்டுக் கொல்ல்பபட்டார். அவரது நினைவு நாள் வரும் 24ம் தேதி வருகிறது.
ஆண்டுதோறும் சிவா நினைவு நாளில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். தற்போதும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 24ம் தேதி அசம்பாவிதம்நடக்காமல் தடுக்க கண்காணிப்புப் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications