ஜெயலட்சுமி: இன்னொரு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமி செக்ஸ் புகாரில் சிக்கிய மேலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஏட்டு முதல் சூப்பிரண்ட் வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்ஜெயலட்சுமி. இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது.ஜெயலட்சுமி புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவன், வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான்,ஏட்டு கண்ணன் மற்றும் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் ஜெயலட்சுமியின் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புராமன் என்பவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரை மத்திய குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
இவரை தொடர்ந்து இன்னும் சிலரும் சஸ்பெண்ட் ஆகலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications