நீதிமன்றத்தில் சதாமுக்கு அடி: நெற்றியில் காயம்
பாக்தாத்:
நீதிமன்றத்தில் விசாரணையின் போது இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் நீதிமன்ற ஊழியர்களால் தாக்கப்பட்டார்.
அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு ஈராக்கிய சிறையில் உள்ள சதாமிடம் அவரது ஆட்சியில் நடந்த கொடுமைகள்குறித்து விசாாரணை நடந்து வருகிறது.1991ம் ஆண்டு இராக் போருக்குப் பின்னர் ஷியா இனத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குல் பற்றி சதாமிடம் நீதிமன்றத்தில்விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஷியாக்களின் புனித நகரமான கார்பாலாவில்மக்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது பேசிய சதாம், ஷியாக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவே ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டனஎன்றார்.
நீதிபதி குறுக்கிட்டு இமாம் உசேன், இமாம் அப்பாஸ் ஆகிய ஷியா புனிதத் தலங்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றுகேட்டார்.
அதற்கு, நீங்கள் எந்த புனிதத் தலங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று சதாம் பதிலளித்தார். பின்னர்அந்த இரு புனிதத் தலங்கள் குறித்தும் அவர் தவறான வார்த்தையை உபயோகித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நீதிமன்ற அறையில் இருந்த இரு கிளார்க்குகள் (இருவரும் ஷியாக்கள்) சதாமைத் தாக்கியதாகத் தெரிகிறது.அவர்களை சதாமும் திருப்பித் தாக்கினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதியும் பாதுகாப்புப் படையினரும் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் சதாம்உசேனின் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவலில் ஏற்கனவே ஒரு முறையும் சதாம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications