நீதிமன்றத்தில் ஆஜராக சுஹாசினிக்கு உத்தரவு
சென்னை:
குஷ்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சுஹாசினியின் மீது வழக்குகள் குவிகின்றன.
தமிழ் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்றதிரைப்பட விழாவில் குஷ்புவிற்கு ஆதரவாக நடிகை சுஹாசினி தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்றுகூறினார்.
இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.சுஹாசினியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
சரத்குமார் சுஹாசினியின் கருத்தை கண்டித்ததை தொடர்ந்து அவரது ரசிகர்களும் சுஹாசினிக்கு எதிராக போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
குஷ்பு மீது தொடரப்பட்டது போல் சுஹாசினியின் மீதும் வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. இதுவரை 5 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.
ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகரை சேர்ந்த பாலசந்தர் (வயது 46) என்பவர் ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 1வதுநீதிமன்றத்தில் சுஹாசினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் டிசம்பர் 5ம் தேதி சுஹாசினி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சுஹாசினியின் பேச்சை கண்டித்து அவர் மீது வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் ஜானகிராமன் வழக்குதொடர்ந்திருக்கிறார்.சுஹாசினியின் பேச்சு ஆத்திர மூட்டும் வகையில் இருப்பதால் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 153ஏ, 294பி, 499, 500,504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் எழிலரசி வருகிற 30ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.ஏற்கனவே கரூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சுஹாசினி மீது தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரத்குமார் ரசிகர் மன்ற தலைவர் அண்ணாதுரை வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்ஜிஆர் திராவிட முன்னேற்ற கழக தலைவர் அண்ணாதுரை சுஹாசினிக்கு விளக்கம் கேட்டு வக்கீல்நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications