ரூ.100 கோடி: ஜெயேந்திரரின் மருத்துவ கல்லூரி
நகரி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் சங்கரமடம் சார்பில் ரூ. 100 கோடி செலவில் மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கப்படஉள்ளது.
காளஹஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு நேற்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார். அங்கு சாமிதரிசனம்முடித்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்கும் சங்கர மடத்துக்கும் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. இக் கோவிலில் எந்த திட்டம்செயல்பட்டாலும் எங்களிடம் யோசனை கேட்பது வழக்கம். இங்கு மருத்துவ கல்லூரி கட்டுவது பற்றி சில ஆண்டுகளாககாளஹஸ்தி கோயில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இங்கு மருத்துவ கல்லூரி கட்டுவது பற்றி ஆலய நிர்வாகிகள் என்னுடன் எப்போதும் பேச்சு வார்த்தை நடத்தலாம். சங்கர மடம்சார்பில் இங்கு ரூ.100 கோடியில் மருத்துவ கல்லூரி கட்ட தயாராக உள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்என்று நம்புகிறேன்.
திருப்பதி மலையில் ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படுவது பற்றி என்னிடம் மாநில அரசு கருத்து எதுவும் கேட்கவில்லை.ரோப்கார் திட்டத்தை மாநில அரசு சுயமாக செயல்படுத்துகிறது, அதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்.
சென்னையில் ஒரு மருத்துவமனையை வாங்கிய விவகாரத்தில் தான் சக்தி வாய்ந்தவர்களுக்கும் ஜெயேந்திருக்கும் மோதல்ஏற்பட்டு, பின்னர் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானது நினைவுகூறத்தக்கது.
அப்பு ஜாமீன் மனு ஒத்திவைப்பு:
இதற்கிடையே சங்கர்ராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்பு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையைசென்னை உயர் நீதிமன்றம் வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இன்று நீதிபதி சர்தார் சக்காரியா ஹூசேன் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அப்பு தரப்பின் வாதங்களுக்கு பதிலளிக்கஅரசுத் தரப்பு 10 நாட்கள் அவகாசம் கேட்டது. இதையடுத்து விசாரணை ஒத்தி வக்ைகப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications