காங்கிரஸை தனியே பிரிக்க ஜெ. சதி: கருணாநிதி
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை பிரிக்க சதி நடக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
கருணாநிதி அளித்த பேட்டி:கே: தற்போது உங்கள் கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் தேர்தல் வரை தங்களுடன் இருக்கும் என்று நம்புகிறீர்களா?
ப: எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை பிரித்துவிட வேண்டும் என்று ஜெயலலிதா எத்தனையோ முயற்சிகளை எடுத்துபார்க்கிறார். ஆனால் அது பலிக்கப் போவதில்லை.
நான் சோனியா காந்தியிடம் கொண்டுள்ள சகோதரி என்ற பாசமும், அவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையும் பற்றும்பாசத்திற்கிடையே எங்கள் இருவரிடையே ஏற்பட்டுள்ள நன்றி பாராட்டும் கடமை உணர்வும், எல்லாவற்றுக்கும் மேலாகநாகரீகமானதும் கலாசாரம் காத்திடக் கூடியதுமான ஜனநாயக அடிப்படையில் தேசத்தை முன்னேற்ற நாங்கள் கொண்டுள்ளஆர்வமும் தான் எங்கள் கூட்டணியின் வலிமை ஆகும்.
எனவே எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளை பிரிக்க முனையும் முயற்சி அனைத்தும் அடியோடு விழுமே தவிர வெற்றி பெறாதுஎன்பது நிச்சயம்.
கே: திமுகவில் தங்களுக்கு பிறகு அடுத்து மத்திய மந்திரி தயாநிதி மாறன் தான் பலம் வாய்ந்தவர் என்ற கருத்து உள்ளதே?
ப: நீங்கள் சொல்வது போல் சில பேர் சூழ்ச்சித் திட்டம் வகுக்கலாம். ஆனால் தொண்டர்கள் என நீங்கள் குறிப்பிடும் தூய்மையானஉடன் பிறப்புகள் யாரும் அதுபோல சிண்டு முடியும் வேலையில் இறங்கவில்லை. இறங்கவும் மாட்டார்கள்.
கே: மு.க. ஸ்டாலின், அழகிரி ஒப்பிடுக...
ப: ஸ்டாலின் அழகிரியை விட இளையவர், அழகிரி, ஸ்டாலினை காட்டிலும் மூத்தவர். வயது வித்தியாசம் 2 ஆண்டுகள்.
கே: மகள் கனிமொழியை ஏன் அரசியலுக்குள் இழுக்கவில்லை?
ப: கனிமொழி மட்டுமல்ல யாரையும் நான் அரசியலுக்கு இழுத்து வரவில்லை. கனிமொழி உள்ளிட்ட என் குடும்பத்தினர்அனைவருக்கும் அறிவுரை தான் கூறுவேனே தவிர ஆணையிட்டு அவர்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயலில் என்றைக்கும்ஈடுபட்டதில்லை.
கே: நேரத்தை எப்படி பிரித்து பயன்படுத்துகிறீர்கள்?
ப: விடியற்காலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நேரத்தை எப்படி பிரித்துக் கொள்கிறேன்என்பதற்கு இதுவே போதுமான விளக்கமாகும். அதாவது நேரத்தை நான் விரித்துக் கொள்வதில்லை. நினைக்கும் போதெல்லாம்எடுத்துக் கொள்கிறேன்.
கே: திரைப்படத்துறையை குறி வைத்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஆரோக்கியமானதா?
ப: இரு முனையிலும் அந்த ஆரோக்கியமற்ற காரியத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென்பதே என் கருத்து.
கே: வயதை வென்றவராக இருக்கிறீர்களே? அதன் ரகசியம்.
ப: சோம்பலுக்கு தீனி போடாமல் விரட்டியடிப்பது தான் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications