குறைந்தது 3 குழந்தைகளை பெற்றெடுங்கள்: இந்துக்களுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை இந்துக்கள் பின்பற்றக் கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஷன் கூறியுள்ளார்.வீட்டுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பெருகி வரும் மக்கள் தொகை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடும்பக் கட்டுப்பாடு என்பது தங்களது மதத்தின்கொள்கைகளுக்கு விரோதமானது என இஸ்லாமியத் தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த மதரீதியிலானஅறிவுறுத்தல்களையும் தாண்டி முஸ்லீம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து தான் வருகின்றனர்.

அதே போல இந்துக்களும் பெரும் அளவில் குடும்பக் கட்டுபாட்டை செய்து வருகின்றனர். மக்கள் தொகையைக்கட்டுப்படுத்தினால் தான் நாடு உருப்பட முடியும் என்ற நிலையில், வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற பிரச்சாரத்தை மத்திய, மாநிலஅரசுகள் தீவிரமாக செய்து வருகின்றன.

இந் நிலையில் மத்திய திட்டக் கல்வி என்ற அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 2001ல் இந்தியா- மதங்களும் மக்களும்என்ற அறிக்கையை ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் வெளியிட்டார்.

இதன் பின் அவர் பேசியதாவது:

வீட்டுக்கு இரண்டு குழந்தை, ஒரு குழந்தை என்ற பிரச்சாரத்தை எல்லாம் கேட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படிச் செய்தால்அடுத்த 120 ஆண்டுகளில் உங்கள் பரம்பரையில் குழந்தையே இருக்காது.

இதனால் குறைந்தபட்சம் வீட்டுக்கு 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். கூடுதலாக பெற்றாலும் மிக நல்லது.

குறைவான குழந்தைகள் பெறுவது மக்கள் தொகையில் சமமின்மையை ஏற்படுத்திவிடும். மக்கள் தொகை பெருக்கத்தால் வேலைவாய்ப்புக்கள் கிடைக்காது என்பது சரியல்ல. சுய வேலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.

தலித் கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கக்கூடியதல்ல. கிருஸ்துவர்களாக மதம் மாறியதலித்துகள் சர்ச்சுகளில் தங்களுக்கு அதிக அதிகாரம் கேட்பதால் அவர்களது கவனத்தை திசை திருப்ப இது போன்றகோரிக்கையை கிருஸ்துவர்கள் முன் வைக்கின்றனர்.

முஸ்லீம்கள் மத்தியில் உள்ள தலாக் முறையிலான விவாகரத்து ரத்து செய்யப்பட வேண்டும். மூன்று முறை தலாக் என்று சொல்லிஎந்தப் பெண்ணையும் தெருவில் தள்ளுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு விவாரத்தும்முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.

பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கிய மக்களாக, ஏழைகளாக,கல்வியறிவு குறைந்தவர்களாக இருப்பது உண்மை தான். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த இஸ்லாமிய கல்வியைநவீனப்படுத்த வேண்டும் என்றார் சுதர்சன்.

பாஜக அடுத்த தலைவர் யார்?

இதற்கிடையே பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி விலகவுள்ளதையடுத்து அடுத்த தலைவராக யாரை நியமிப்பதுஎன்பது குறித்து ஆர்எஸ்எஸ், விஎச்பியுடன் பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனை மாஜி பிரதமர் வாஜ்பாய் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வாஜ்பாயை அத்வானிசந்தித்தார்.

ஆனால், இது குறித்து ஆர்எஎஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் நிருபர்களிடம் பேசுகையில், வாஜ்பாயை சுதர்சன்சந்தித்ததில் விஷேசம் ஏதுமில்லை. ரொம்ப நாட்களாக இருவரும் சந்திக்கவில்லை. அதனால் சும்மா சந்தித்துப் பேசினர். நேரம்இருந்தால் அத்வானியையும் சுதர்சன் சந்திப்பார் என்றார்.

இதற்கிடையே ஆர்எஸ்எஸ் தலைவர்களை வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அதே போலபாஜக தலைவர் பதவி குறித்தும் விஎச்பியும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினருடன் பேசி வருகிறது.

சுதர்சன்- அத்வானி சந்திப்பு:

இந் நிலையில் இன்று சுதர்சனை அத்வானி சந்தித்து கட்சியின் அடுத்த தலைவர் குறித்து ஆலோசனை நடத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+