சென்னை கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22ம் தேதி நடைபெறவுள்ள இந்திய-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒரு நாள்கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை கடற்கரை- மைலாப்பூர் மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க மத்திய ரயில்வேஇணையமைச்சர் ஆர்.வேலு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22ம் தேதி நடக்கவுள்ள இந்திய-தென்னாப்பிரிக்கா பகல்-இரவு கிரிக்கெட்போட்டியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள். ஏற்கனவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.சேப்பாக்கம் மைதானத்தையொட்டி சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ரயில்வே நிலையங்கள் உள்ளன. இதன் வழியாககுறைந்த அளவிலே பறக்கும் ரயில்கள் இயங்குகின்றன.
கிரிக்கெட் போட்டி நாளன்று கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை கடற்கரை-மைலாப்பூர் மார்க்கத்தில் கூடுதல் ரயில்களைஇயக்க மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர்.வேலு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இந்த மார்க்கத்தில் கடற்கரையிலிருந்து பகல் 11.40, 12.10, 12.25, 12.40, 1.40, இரவு 9.10, 9.25, 9.40, 9.55, 10.10ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
அதே போல் மறுமார்க்கத்தில் பகல் 12.00, 12.30. 1.00. 1.15. 2.00, இரவு 9.35, 9.50, 10.05, 10.20 ஆகிய நேரங்களில் ரயில்கள்இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications