வெள்ள நிவாரணம்: கூட்ட நெரிசல்; நெஞ்சு வலி---வாலிபர் பலி
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் இன்று வெள்ள நிவாரண உதவி கூட்டத்தில் சிக்கிய ஒரு வாலிபர் நெஞ்சு வலி ஏற்பட்டு பலியானார்.
சென்னையில் சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணஉதவிகளை வழங்கி வருகிறது. ரூ.2,000 ரொக்கம், 10 கிலோ அரிசி, மற்றும் வேட்டி-சேலை கொடுக்கப்படுகிறது.மயிலாப்பூர், திருவல்லிக்கேணி வட்டங்களில் இன்றும், நாளையும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இதற்கான பணி இன்றுகாலை தொடங்கியது.
சமீபத்தில் வியாசர்பாடியில் நிவாரண உதவி பெற குவிந்த கூட்டத்தில் சிக்கி 6 பெண்கள் பலியானார்கள். அது போன்ற விபரீதம்எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் 100 ரேஷன் கடைகளில் விரிவானஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மயிலாப்பூர் காரனேசன் கோவில் தெருவில் உள்ள ரேசன் கடையில் வெள்ள நிவாரண உதவி இன்று வழங்கப்பட்டது. உதவியைபெற ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றனர்.
அப்போது திடீரென தள்ளு-முள்ளு ஏற்பட்டது.இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் நீண்ட நேரம் நின்ற காரணத்தால் கருணாகரன்(வயது 35) என்பவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். மேலும் நெரிசல்காரணமாக மயக்கம் வருவதாகவும் அருகில் இருந்த தன் தம்பியிடம் கூறினார்.
இதையடுத்து சில பேர் அவரை அம்பேத்கார் பாலம் லூர்துபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது பற்றி மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications