அமெரிக்காவுக்கு பறந்தார் சுஹாசினி
சென்னை:
சுஹாசினி தன் மீது குவிந்து வரும் வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என்று நடிகை குஷ்பு சொன்ன கருத்துக்கு தமிழ்நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த பிரச்சினை அடங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடிகை சுஹாசினி தமிழர்களுக்குஎதிரகவும் குஷ்புவுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கிறது என்று கருத்து வெளியிட்டார்.
தமிழினத்தையே அவமானப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்ததால் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் பல்வேறுநீதிமன்றங்களில் சுஹாசினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.
சுஹாசினிக்கு எதிராக கரூர் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. அதன் பிறகு ஈரோடு, வாலாஜபேட்டை, திருச்சி,எழும்பூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்திலும், திண்டுக்கல் 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்திலும் சுஹாசினி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக சார்பில் சுஹாசினி மீது மேலும் ஒருவழக்கு போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
முதல் கட்டமாக ஈரோடு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் டிசம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக சுஹாசினிக்கு சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராகவில்லையெனில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தனக்கு எதிராக குவியும் வழக்குகளை கண்டு மலைத்து போய் உள்ள சுஹாசினி தமிழ்நாட்டில் எங்கும் செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தங்கியிருப்பது நல்லதல்ல என்று அவர் குடும்பத்தினர் சொன்னார்களாம்.
இதை ஏற்றுக் கொண்ட சுஹாசினி மிக ரகசியமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவுக்கு சென்றவர் அப்படியே அங்கிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் எஸ்கேப்ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதை அறிய அவரது உதவியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,தனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இப்போது சென்னையில் அவர் இல்லை. திங்கட்கிழமை திரும்பிவிடுவார் என்றார்.
ஆனால் நீதிமன்றத்தில் இருந்து வரும் சம்மன் உத்தரவை கையெழுத்திட்டு பெறுவதை தவிர்க்கவே அவர் அமெரிக்காவில்தஞ்சம் அடைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.
இது பற்றி பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் மூத்த தலைவர்களிடம் கேட்ட போது தமிழர்களை அவமானப்படுத்தியசுஹாசினி எங்கு போனாலும் தப்ப முடியாது. சம்மனை அவர் சார்பில் யாரும் வாங்காவிட்டால் அவர் வீட்டு கதவில் ஒட்டமுடியும். அதன் பேரில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றனர்.
எனவே சுஹாசினி விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications