மாநகராட்சி கூட்டம்: காங்கிரஸ் கலந்து கொள்ளுமா? ஜி.கே.வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி கூட்டம் வருகிற 21ம் தேதி கூட்டப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளுமா என்பது குறித்துஇன்று அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி யானைக்கவுனியில் உள்ளஇந்திராகாந்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், தங்கபாலு எம்பி உள்ளிட்ட பல காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:

சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் வெள்ள நிவாரண பணி மெத்தனமாக நடக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. ஆளுங்கட்சியினர் அடையாளம் காட்டும் நபர்களுக்கு மட்டுமே உதவிகள்கிடைக்கின்றன.

ஆட்சியில் இருப்பவர்கள் நியாயமாக செயல்பட்டு உண்மையக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும்.

வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ள மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளுமா என்பது தொடர்பாகமாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் ராயபுரம் மனோ மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் இன்று மாலை கூடி பேசியபின் முடிவுஎடுக்கப்படும் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+