ராமநாதபுரம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ராமநாதபுர மாவட்டத்திலுள்ள கோயில்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக தீவிரவாத அமைப்பு பெயரில் போலீசுக்குமிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் குண்டு வைத்துதகர்க்கப்படும் என அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பெயரில் கிடைத்த மிரட்டல் கடிதம் விடுத்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், விமான நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோயில்களுக்கு வரும் பக்தர்கள், ரயில்வே ஸ்டேஷனிற்கு வரும் பயணிகளை மெட்டல் டோர் டிடெக்டர் மூலம் சோதனையிடநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தபால் நிலையம் அருகேயுள்ள ஒரு தபால் பெட்டியில்அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பெயரில் தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்தது.

அதில், "டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களை குண்டுவைத்து தகர்ப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசாரணையில், உள்ளூரைச் சேர்ந்த யாராவது இதை செய்திருக்கலாம்என தெரிய வந்தது.

இதேபோல் ஏற்கனவே வந்துள்ள கடிதங்களுடன் இக்கடிதத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணியில் போலீசார்ஈடுபட்டுள்ளனர். உளவுபிரிவின் தகவல்படி மாவட்டத்தில் உள்ள கோயில்கள், முக்கிய சந்திப்புகள், பஸ் ஸ்டாண்டுகளில்பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+