ஜெ. ஆட்சியின் அதிசயங்கள்: கருணாநிதி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருமணத்துக்கு முன் செக்ஸ் என்பது குறித்த குஷ்புவின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளிக்க திமுக தலைவர் கருணாநிதிமறுத்துவிட்டார்

திமுக எம்பிக்களுடன் இன்று கருணாநிதி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவரிடம் குஷ்புவிவகாரம் பற்றி.. என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டபோது பதிலளித்த கருணாநிதி,

நீங்களே விவகாரங்கள் என்று சொல்லி விட்டீர்கள். நான் விவகாரங்களுக்குள் தலையிடுவதில்லை. அது எனக்குப் பிடிப்பதில்லைஎன்றார்.

தமிழகத்தில் எனக்கு மாற்றான அரசியல் சக்தி யாருமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து கேட்டபோது,உலகில் மிக மோசமான விஷயங்களுக்குத் தான் மாற்று கிடையாது. மாற்று இல்லை என்றால் அது மோசம் என்று தான் பொருள்என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு வெள்ள நிவாரணம் என்று சொல்லி எதேதோ உதவிகளைஅறிவிக்கிறது தமிழக அரசு. ஆனால், அதைக் கூட மக்களுக்கு ஒழுக்காகக் கொடுக்கவில்லை.

அங்கே வா, இங்கே வா என்று மக்களை ஓட விடுகிறார்கள். நிவாரண உதவி பெற அங்குமிங்கும் ஓட வேண்டிய நிலைக்கு மக்கள்தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தால் சென்னையில் மட்டும் 9 உயிர்கள் பலியானது தான் மிச்சம்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை பேர் என்பதைக் கூட அதிகாரிகள் சரிவர கணக்கெடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் இருக்கும்போது இது போன்ற இயற்கைச் சீற்றம் நடந்தால் முதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைஅறிவோம். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலை தயார் செய்வோம். அதன் பின்னர் நிவாரணத்தை அவர்களுக்குப்போய்ச் சேர்ப்போம்.

ஆனால், இந்த அரசிடம் எந்தவிதமான முறையான திட்டமும் இல்லை. செயல்பாடும் இல்லை. நிவாரணத்தைக் கூட ஏதோஅவர்களது (அதிமுக) கையில் இருந்து கொடுப்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள்.

இவர்கள் சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு பல கோடி மதிப்பில் உதவி செய்யப் போவதாகச் சொன்னார்கள். ஆனால்,அதில் பல இடங்களில் ஊழல் நடந்திருப்பதும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குக் கூட மாற்று வீடு தரவில்லை என்பதும்மத்திய அரசில் உள்ள சில அமைச்சர்களின் கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

மத்திய அமைச்சர்கள் என்று நான் சொல்வது தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களை அல்ல. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்குநன்றாகவே தெரியும். இந்த அரசின் நிவாரணப் பணிகள் எப்படிப்பட்டவை என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் நன்றாகவேஉணர்ந்துள்ளார்கள் என்றார்.

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை முதல் முறையாக ஒரு ஆணையர் கூட்டியிருக்கிறாரே என்று கேட்டபோது பதிலளித்தகருணாநிதி, ஜெயலலிதாவின் ஆட்சியில் நடக்கும் பல அதிசயங்களில் இதுவும் ஒன்று. மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்த திமுகமேயரை ஒரு சட்டம் போட்டு தூக்கினார்கள்.

துணை மேயரையும் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் திரிசங்கு சொர்க்கத்தில் வைத்துவிட்டார்கள். சென்னை மாநகராட்சிபுராணம் எப்போது, எப்படி முடியப் போகிறதோ தெரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+