பிகாரில் ஐக்கிய ஜ.தளம்-பாஜக கூட்டணி வெற்றி: மண்ணைக் கவ்விய லாலு
பாட்னா:
பிகார் சட்டமன்றத் தேர்லில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
அந்தக் கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரசும் பெரிய அளவில் தோல்வி கண்டுள்ளது. அதே போல உரத்துறை அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன் சக்திக்கும் தோல்வியே கிடைத்துள்ளது.243 பேர் கொண்ட சட்டசபைக்கு 4 கட்டமாகத் தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
122 இடங்களைப் பிடித்தால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு 148இடங்களில் வென்று பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களைப் பிடித்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 63 இடங்களில் மட்டுமே வென்றது. லோக்ஜன் சக்தி 14 இடங்களிலும் சுயேச்சைகளும் பிற கட்சிகளும் 17இடங்களிலும் வென்றுள்ளன.
வழக்கமாக லாலுவுக்கு ஆதரவு தந்து வந்த யாதவ், முஸ்லீம், தலித்களின் வாக்குகளில் ஒரு பகுதி இந்தமுறை நிதிஷ்குமார்பக்கமாக சாயந்துவிட்டதே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாகும். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியின்சார்பில் நிதிஷ்குமார் முதல்வராகிறார்.
மகாராஷ்டிரா: சிவசேனை டெபாசிட் காலி
இதற்கிடையே மகாராஷ்டிரத்தின் மால்வான் சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்போட்டியிட்ட நாராயண ரானே வெற்றி பெற்றார். இத் தொகுதியில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சிவசேனையில் இருந்த ரானே சமீபத்தில் அதிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின்சவாலை ஏற்று மால்வான் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மீண்டும் அவர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக வேட்பாளரைக் களமிறக்கிய சிவசேனையின் வேட்பாளர்பரசுராம் உப்கார் டெபாசிட் இழந்தார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ரானே, இந்தத் தோல்வி சிவசேனையின் தலைவர் தாக்கரேவுக்கு ஏற்பட்ட தோல்வி, காங்கிரஸ்தலைவர் சோனியாவுக்குக் கிடைத்த வெற்றி என்றாார்.
சுனில் தத் மகள் வெற்றி:
அதே போல சமீபத்தில் மரணடைந்த காங்கிரஸ் எம்பியும் நடிகருமான சுனித் தத்தின் தொகுதியான வட மேற்கு மும்பைநாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவரது மகள் பிரியா தத் வெற்றி பெற்றார்.
இங்கும் சிவசேனை-பாஜக கூட்டணிக்கு தோல்வியே கிடைத்துள்ளது. சிவசேனை வேட்பாளர் மதுக்கர் சர்போத்கரை ப்ரியா தத்1.72 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.
திருவனந்தபுரத்தில் சிபிஐ வெற்றி:
திருவனந்தபுரம் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்வேட்பாளர் ரவீந்திரன் 70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிவக்குமார் தோல்வியுற்றார்.












Click it and Unblock the Notifications