திசை மாறிய புயல்: தூத்துக்குடி-தொண்டி இடையே கரையை கடக்கிறது
சென்னை:
வங்கக் கடலில் ராமேஸ்வரத்துக்குக் கிழக்கே உருவான புயல் சின்னம் வலுவடைந்து வேகமாக கரை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்தப் புயல் தூத்துக்குடி- தொண்டி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக புயல் நாகப்பட்டிணம்-பாம்பன் இடையே நேற்றிரவு அல்லது இன்று காலை கரையைக் கடக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது இன்று தொண்டி-தூத்துக்குடி இடையே கரையைக்கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு 250 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல் இன்று காலை 5 மணி நிலவரப்படி ராமேஸ்வரம்மாவட்டம் பாம்பனில் இருந்து கிழக்கு-தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவை நெருங்கியது. பகல் 12.30 மணியளவில் அதுமேற்குப் பக்கமாக நகர்ந்து கரையிலிருந்து 100 கி.மீ. தூரத்தை நெருங்கிவிட்டது.
இதே திசையில் புயல் சின்னம் பயணித்தால் தொண்டி-தூத்துக்குடி இடையே பிற்பகலில் அது கரையைக் கடக்கும் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் மேலும் அதிகமான கன மழையும், பயங்கர புயல் காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சின்னத்தால் கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இப்போது புயல் கரையைக்கடப்பதால் மேலும் அதிகமான மழை பெய்யும். மணிக்கு சுமார் 60 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசும் என்றும்எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் பலத்த சூறாவளியால் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. அலைகள் சுமார் 13 அடி உயரம் வரை உயர்ந்துஅந்தப் பகுதியையே நடுக்கத்தில் ஆழ்த்தின. பலத்த ஓசையுடன் எழுந்த ராட்சத அலைகள் கரைகளையும் தாண்டி வசிப்பிடங்கள்வரை வந்து சென்றன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பீதி பரவியுள்ளது.
பலத்த காற்றாலும் அலைகளாலும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு ஆகிய இடங்ளில்கரையோரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாயந்தன.
வேதாரண்யத்தில் தான் அதிகபட்சமாக 90 மிமீ மழை பெய்துள்ளது.
நாகப்பட்டிணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. கன மழை மற்றும் புயல்காரணமாக நாகை, சென்னை, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications