தூத்துகுடியில் புதிய மின் நிலையம்: என்எல்சி-தமிழக அரசு கூட்டு முயற்சி
நெய்வேலி:
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும், தமிழக மின்வாரியமும் இணைந்து என்எல்சி-தமிழ்நாடு மின் நிறுவனம்என்ற பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனத்தை துவக்கியுள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட இந் நிறுவனம் தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள 1,000 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையத்திற்காக பணிகளை மேற்கொள்ளவுள்ளது.என்எல்சி நிறுவனமும், தமிழக மின் வாரியமும் இணைந்து ரூ. 4,500 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் நிலக்கரியின்மூலம் இயங்கும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தினை அமைக்கவுள்ளன.
இதற்கு தேவைப்படும் ஒரு ஆண்டிற்கான 50 லட்சம் டன்கள் நிலக்கரி ஒரிஸ்ஸா மாநிலம் தால்ச்சர் சுரங்கத்தில்இருந்து எடுத்து வரப்படவுள்ளது.
இத்திட்டத்திற்காக மூலதனத்தில் என்எல்சி 89 சதவிகிதமும், தமிழக மின்வாரியம் 11 சதவிகிதமும் வழங்கியுள்ளன.நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரை இந் நிறுவனங்களின் சொந்த நிதி மற்றும் கடன் தொகைகள் திரட்டப்படுவதன்மூலம் பெறப்படும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி, மத்திய மின்சக்தி அமைச்சகம் நிர்ணயித்துள்ள அளவுகளின் படி தமிழகம்,கர்நாடகம், கேரளா, புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
இவற்றில் பெரும்பாலான அளவு தமிழகத்திற்கு வழங்கப்படும். எதிர்வரும் 2010- 2011ம் நிதியாண்டில் இப்புதியதிட்டம் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications