விஜய்காந்த் கட்சியில் கோஷ்டிப் பூசல்
மதுரை:
கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் முத்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி தொடங்கிய விஜயகாந்த், அதன்பிறகுமாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்தார்.தனது கட்சியை இன்னும் பதிவு செய்யாத நிலையில் அடுத்த மாதம் முதல் கிராமவலப் பயணம் தொடங்கி கட்சி பிராசாரத்திலும்,தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடவுள்ளார்.
இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில் அவரது கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் ஆரம்பித்துவிட்டன. பதவிகளை எதிர்பார்த்துபிற கட்சிகளில் இருந்து அவரது கட்சியில் சேர்ந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் விஜய்காந்தின் ரசிகர் மன்றத்தில் பலஆண்டுகளாக இருந்தவர்கள் எல்லாம் ஒதுக்கப்பட்டு, பண பலம் படைத்தவர்களுக்கு திடீர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் அவரை நம்பி இத்தனையாண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் ஆங்காங்கே அதிருப்திக் குரல் எழுப்பஆரம்பித்துள்ளனர். அவ்வாறு அதிருப்தி தெரிவித்த மதுரை மாவட்ட ரசிகர் மன்றச் செயலாளர் முத்துவை கட்சியிலிருந்துநீக்கியுள்ளார் விஜய்காந்த்.
வார இதழுக்கு முத்து கொடுத்த பேட்டியில், விஜய்காந்த் விஜயராஜா இருந்தபோதே எனக்கு அவரைத் தெரியும். அன்று முதல்விஜய்காந்துக்காக 27 வருடம் உழைத்தேன். எனது உழைப்பு வீணாகிவிட்டது. விஜய்காந்துக்கு முதலில் ரசிகர் மன்றம்ஆரம்பித்தவன் நான். ஆனால், நான் பிள்ளைமார் ஜாதிக்காரன்.
அதனால் தான் எனக்கு கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி தராமல் தனது ஜாதிக்காரரை நியமித்துள்ளார். விஜய்காந்துக்குமதுரை அரசியல் தெரியாது. அவரை 10 ஓட்டு வித்தியாசத்திலாவது தோற்கடிப்பது தான் என் முதல் வேலை என்றார்.
இந்தப் பேட்டியையடுத்து முத்துவை கட்சியில் இருந்து நீக்கியுள்ள விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநில அமைப்புச் செயலாளராகவும், தேமுதிகவின் மதுரை மாவட்ட பொறுப்பாளராகவும் இதுவரைசெயல்பட்டு வந்த முத்து மன்ற-கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமலும் விதமுறைகளுக்குமுரணாகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் மன்றம் மற்றும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படைஉறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
அவருடன் மன்ற, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ரசிகர் மன்றத்தில் மதுரை மாவட்டச் செயலாளராகவும், அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்த முத்து தேமுதிகவில் மதுரைமாவட்டத் தலைவராகவோ, மதுரை நகரத் தலைவராகவோ தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரி வந்தார்.
ஆனால், அவருக்கு பதவி கிடைக்கவில்லை. மதுரை நகர் மாவட்டத் தலைவராக ராஜேந்திரனையும், மாவட்டத் தலைவராகராஜாவையும் விஜயகாந்த் நியமித்தார். பிறகு மன்ற நடவடிக்கைகள் குறித்த அனைத்து கோப்புகளையும் அவர்களிடம்ஒப்படைக்கும்படி முத்துவுக்கு விஜய்காந்த் உத்தரவிட்டார்.
ஆனால், அதை முத்து ஏற்கவில்லை. மன்ற அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை போய் விட்டதாக பதில்தந்தார்.
இது குறித்து முத்துவிடம் கேட்டபோது,
விஜயகாந்த் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக உருவெடுத்த போது அயராது உழைத்தேன். அதன் மூலம் என்னைகெளரவப்படுத்துவார்கள் என்று நினைத்தேன். அதற்கு மாறாக எல்லாம் நடந்து வருகிறது. நான் கட்சிக்கோ, மன்றத்துக்குவிரோதமாக எந்த நடவடிக்கைகயிலும் ஈடுபடவில்லை.
என்னை நீக்கியது விஜயகாந்துக்கு தான் நஷ்டமே தவிர எனக்கு ஒன்றும் இல்லை. 27 ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது.நல்ல உழைப்பாளியை விஜயகாந்த் இழந்துவிட்டார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications