சென்னை துறைமுகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு: 2 ஊழல் அதிகாரிகள் சிக்கினர்
சென்னை:
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திலும் அதன் அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ அதிரடி ரெய்ட் நடத்தியது.
நாடு முழுவதும் துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், கப்பல் சரக்கு ஏற்றி இறக்கும் மையங்கள், அவற்றின் அலுவலகங்கள்,அதிகாரிகளின் வீடுகள் என 33 இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன.ஊழல், லஞ்சம், முறைகேடுகளில் ஈடுபட்டதாக 14 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபிஐ நடத்திய இந்தரெய்டில் பல அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் செயற் பொறியாளர் ஒருவர் தனது மாமனாரின் பெயரில் ஒரு போலியானநிறுவனத்தைத் துவக்கி, அதற்கு ரூ. 33 லட்சம் மதிப்புள்ள காண்ட்ராக்ட்களை வழங்கியுள்ளார்.
பின்னர் அந்தப் பணத்தை மாமனார் தந்த பரிசு என்ற பெயரில் தனது வங்கிக் கணக்குக்கு திருப்பி விட்டுள்ளார். இந்த திருட்டுசெயற்பொறியாளர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதே போல சென்னை பொறுப்புக் கழகத்தின் ஹார்பர் மாஸ்டர் தனது வருமானத்தை மீறி அரசியல்வாதிகளை விடவும் பெரும்அளவில் சொத்து சேர்த்துள்ளார். இந்த பிராடு மாஸ்டரின் வீட்டிலும் அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தி பல்வேறு சொத்துப்பத்திரங்களை பறிமுதல் செய்தது.
இவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருப்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகப் பொறுப்புக்கழகத்தின் சரக்குக் கிட்டங்களிலும், சரக்கு ஏற்றி இறக்கும் மையங்களிலும் சோதனைகள் நடந்தன.
இங்கும் பல்வேறு ஏற்றுமதிகளுக்கு முறைகேடான வகையில் வரி விலக்கு அளிக்கப்பட்டதும், அதற்காக அதிகாரிகளுக்குலட்சக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டு வந்த விவரத்தையும் சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
அவை தவிர மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய துறைமுகங்களிலும், நாக்பூர்,சம்பல்பூர், ராஞ்சி, அஸனால், பிலாஸ்பூர், தான்பாத் ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்களிலும், பெங்களூர், ஹைதராபாத்ஆகிய நகர்களில் உள்ள சரக்கு மையங்களிலும், அவற்றின் அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு பல்வேறுமுறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications