மீண்டும் இந்திய அணியில் கங்குலி
சென்னை:
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த மாதம் நடக்கவுள்ளஇலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டி தொடர்களில் விளையாடுவார்.
கங்குலிக்கும் இந்திய அணி பயிற்சியாளர் கிரேக் சாப்பலுக்கும் இடையே கடந்த மாதம் ஜிம்பாப்வே நாட்டுக்கு எதிரான போட்டிதொடரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கங்குலி கிரிக்கெட் விளையாடுவதற்கு உடலளவிலும், மனதளவிலும்தகுதியானவர் இல்லை என்று பயிற்சியாளர் கிரேக் சாப்பல் கங்குலி மீது குற்றம் சாட்டினார்.இதை தொடர்ந்து அவர் ஜிம்பாப்வே நாட்டுக்கு எதிரான போட்டியின் இடையே அணியிலிருந்து நீக்கப்பட்டார். ராகுல் திராவிட்கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இந்திய-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே தற்போது நடந்து வரும்தொடர்களிலும் கங்குலி இடம் பெறவில்லை.
இந்திய-தென் ஆப்பிரிக்கா போட்டிக்கும் திராவிட் அணித் தலைவராக தலைமை வகித்தார். இந்நிலையில் சென்னையில் நேற்றுநடந்த கிரிக்கெட் வாரிய குழு கூட்டம் அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக இந்திய அணி மோதவுள்ள கிரிக்கெட் போட்டிதொடருக்கு ராகுல் திராவிட் கேப்டனாக நீடிப்பார் என்று அறிவித்தது.
அந்த அணியில் கங்குலிக்கு இடம் தரப்படவில்லை.
இந் நிலையில் கொல்கத்தாவில் துலீப் டிராபி அணியில் விளையாடிக் கொண்டிருந்த கங்குலி, அந்த அணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இந்திய அணியில் இடம் தரப்படாததைக் கண்டித்தும், கிரிக்கெட் வாரியத்தின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் அவர் விலகியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே கங்குலியை மீண்டும் இந்திய அணியில் சேர்த்துள்ளது கிரிக்கெட் வாரியம். கங்குலி நீக்கப்பட்டதற்கு எதிராககொல்கத்தாவில் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கங்குலிக்காக மேற்கு வங்க முதல்வரும் இடதுசாரிகளும்ஆதரவு குரல் தந்தன.
இந் நிலையில் அவர் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications