செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: சைதையில் வெள்ளக்காடு
பூந்தமல்லி:
![]() |
இதனால் சென்னையில் சைதாப்பேட்டை, ஆலந்தூர் இடையிலான பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி பூந்தமல்லியை அடுத்து அமைந்துள்ளது. இந்தஏரி நேற்று திறக்கப்பட்டது. ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட உபரிநீர் அடையாற்றில்வெள்ளம் போல் பாய்ந்து சென்றது.
9 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்த ஏரி ஏறக்குறைய நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
![]() |
எனவே தொடர்ந்து மழை பெய்து ஏரி நிரம்பி வழிவதையும், அதனால் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்க்கவும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. முதலில் விநாடிக்கு 300 கனஅடிவீதம் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இறுதியில் 500 கன அடி நீர் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டது.
ஏரியிலிருந்து அடையாற்றில் வெளியேறும் நீர் காவனூர், சிறுகளத்தூர், திருநீர்மலை, குன்றத்தூர், திருமுடிவாக்கம், மணப்பாக்கம்,ராமாவரம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகள் வழியாக கடலுக்குள்செல்கிறது.
இந்த ஏரியில் உள்ள மொத்த 19 மதகுகளில் 5 மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் சாலைகளிலும் தண்ணீர்புகுந்துள்ளது. சைதை-ஆலந்தூர் இடையிலான தரைப் பாலம் நீரில் மூழ்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
![]() |
சமீபத்தில் பெய்த மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி நிரம்பிவிட்டது. இதனால் இந்த ஏரி இன்று மாலைதிறக்கப்படுகிறது. இந்த உபரி நீர் செங்குன்றம், சோழவரம் ஏரியில் கலக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இன்னும் தமிழக அரசு நிவாரண உதவி கிடைக்கவில்லைஎன்று அந்த தொகுதி எம்எல்ஏ ஆறுமுகம் வீட்டை முற்றுகையிட்டனர். திருவொற்றியூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பச்சைகார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 65,603 பேர். இவர்களில் 15,350 பேருக்குத் தான் நிவாரண உதவி கிடைத்தது.
மீதி பேருக்கு உதவித் தொகை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சாத்துமா நகர், தியாகராயபுரம்,காலடிப்பேட்டை, ராஜாகடை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து திருவொற்றியூர் எம்எல்ஏ ஆறுமுகம் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?















Click it and Unblock the Notifications