இலங்கை: அமைச்சரவை பதவியேற்பு- ஜேவிபிக்கு இடமில்லை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. ஜேவிபி, ஜேஎச்யூ ஆகிய சிங்க இனவாதகட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.

வெளியுறவுத்துறை அமைச்சராக ஜேவிபிக்கு மிக நெருக்கமான மங்களா சமரவீரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அதிபர்ராஜபக்ஷேவின் தேர்தல் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றே நடக்க வேண்டிய இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கூட்டணியில் நிலவிய உட்கட்சிப் பூசல் காரணமாவும், அமைச்சர்பதவிக்கான போட்டா போட்டி காரணமாகவும் ஒத்தி வைக்கப்பட்டது.

அமைச்சர்களைத் தேர்வு செய்வதில் சுதந்திரா கட்சியின் மக்கள் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளான ஜேவிபி மற்றும் ஜேஎச்யூஆகிய சிங்கள இனவாத கட்சிகளுக்கும் அதிபர் ராஜபக்ஷேவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

ஜேவிபி, ஜேஎச்யூ ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் அதிக இடங்களைக் கேட்டு வருகின்றன. ஆனால், அதை அதிபர்ராஜபக்ஷே ஏற்கவில்லை.

இந் நிலையில் இன்று 25 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றது. அதில் ஜேவிபி, ஜேஎச்யூ ஆகிய கட்சிகளுக்குபிரதிநிதித்துவம் தரப்படவில்லை.

பாதுகாப்பு மற்றும் நிதித்துறையை அதிபர் ராஜபக்ஷே தன் வசமே வைத்துக் கொண்டுள்ளார். முன்னாள் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் சகோதரர் அருணா பண்டாரநாயகேவுக்கு சுற்றுலாத்துறையைக் கொடுத்துள்ளார் ராஜபக்ஷே. சந்திரிகா அரசில்வெளியுறவு அமைச்சராக இருந்த இவர் பிரதமர் பதவியைக் கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத்துறை துணை அமைச்சராக கிரிக்கெட் வீரர் அர்ஜூனா ரணதுங்கா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுஅமைச்சர் சமரவீராவிடம் விமானத்துறை மற்றும் துறைமுகத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

செய்தித்துறை அமைச்சராக அருணா பிரியதர்சனா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கட்சி பின்னர் அமைச்சரவையில் சேரும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+