ஆப்கான்: கேரள டிரைவரை கொன்ற தலிபான்கள்
டெல்லி:
கடத்தப்பட்ட இந்தியரை கொன்று விட்டோம் என்று தலிபான் தீவிரவாதிகள் அறித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.அவர்களில் கேரளாவைச் சேர்ந்த மணியப்பன் குட்டி என்ற டிரைவரும் ஒருவர்.இந்திய எல்லைப் பகுதி சாலை அமைப்பு நிறுவனத்தில் குட்டி பணிபுரிந்து வந்தார். சாலை அமைக்கும் பணிக்காகஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார்.
இவர் உள்பட 4 பேரை கடத்தி சென்ற தீவிரவாதிகள் 48 மணி நேரத்துக்குள் அந்த நிறுவனம் ஆப்பானிஸ்தானை விட்டுவெளியேறாவிட்டால் டிரைவர் குட்டியை கொலை செய்து விடுவோம் என்று அறிவித்திருந்தனர்.
ஆப்கான் அரசு உதவியுடன் குட்டியை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்களையும் எடுத்து வந்தது. இதற்கிடையே தலிபான்தீவிரவாதிகள் விதித்த கெடு நேற்ற மாலையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் குட்டியை சுட்டுக் கொன்றுவிட்டதாக தீவிரவாதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தலிபான் செய்திதொடர்பாளர் யூசுப் அகமது கூறியதாவது:
இந்திய எல்லைப்புற சாலை நிறுவனம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து இருந்தோம். இதுதொடர்பாக யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் நாங்கள் கடத்தி வந்த இந்தியரை துப்பாக்கியால் சுட்டுகொன்று விட்டோம். அவரது உடலை வீசி எறிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட கேரள டிரைவர் மணியப்பன் ராமன் குட்டியின் உடல் தெற்கு ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவர் பிணமாக கிடந்தார். தீவிரவாதிகளின் இந்தகொடூர செயலை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
இதை தொடர்ந்து கடத்தப்பட்ட கேரள டிரைவர் ராமன் குட்டி தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications