அமைச்சர்களை நெளியவைத்த எஸ்எஸ் சந்திரன்
திருச்சி:
மைக்கில் பேசும் அரசியல்வாதிகள் தெரியும். மைக்குடன் பேசும் அரசியல்வாதியைத் தெரியுமா?. அவர் வேறு யாருமல்லஅதிமுக எம்பி எஸ்எஸ் சந்திரன் தான்.
சமீபத்தில் திருச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எம்பி எஸ்.எஸ்.சந்திரன் அமைச்சரின் கடந்த காலம் குறித்துப் பேசிஅமைச்சர்களை சங்கடத்தில் நெளிய வைத்தார்.அதிமுகவின் உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து விளக்கவே அந்தக் கூட்டம் நடந்தது. அமைச்சர் ஓ.பி உள்ளிட்ட பலமாண்புமிகுக்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ். சந்திரன் தனது வாயை கோணியபடி பேசியதாவது:
நான் உழவர் பாதுகாப்புத் திட்டம் பத்தியோ, அம்மாவின் சாதனைகள் பற்றியோ இங்கே பேசப் போவதில்லை. 35 ஆண்டு காலம்நான் ஒட்டியிருந்த கருணாநிதியின் நயவஞ்சகத் தன்மையைப் பற்றித் தான் பேசுவேன்.. என்றார்.
இவ்வாறு எஸ்.எஸ். சந்திரன் பேசிக் கொண்டிருந்தபோதே, மைக் மக்கர் செய்ய ஆரம்பித்தது. மைக்கில் க்குயுங்... டொர் என்றுசத்தம் வரவே, ஏய் மைக்கே, ஏன் வைகோவைப் போல எக்கோ அடிக்கிறாய் என்று மைக்கோடு பேசினார் எஸ்எஸ் சந்திரன்.
ஒரு வழியாய் மைக் சரியாகிவிட, தொடர்ந்து கலாய்த்த சந்திரன், நான் திமுகவுல இருந்து விலகினபோது இந்த ராதாரவிப் பயஎன்னை அழைச்சுட்டுப் போயி வைகோகிட்ட விட்டுட்டு ஓடிப் போய்ட்டான். அங்கே தில காலம் இருந்து அவஸ்தைப் பட்டபிறகு உயிர் தப்பினா போதும்னு வெளியேறி அதிமுகவுல சேர்ந்தேன்.
35 வருசமா கருணாநிதி கூட இருந்து கவுன்சிலர் கூட ஆக முடியலை. ஆனா, அம்மாகிட்ட வந்த சில மாதத்திலேயேஎம்பியாகிவிட்டேன்.
நான் மட்டுமா?. இதோ மேடையிலே இருக்காரே அமைச்சர் அண்ணாவி. அவர் என்ன செஞ்சுகிட்டு இருந்தார் தெரியுமா?.பஸ்சுல விசில் அடித்து கண்டக்ரடா இருந்தார். இப்ப எவ்வளவு சொகுசா வாழ்றார் தெரியுமா என்றார்.
அப்போது அண்ணாவி ஒரு பக்கம் நெளிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் நெளிந்தார். (இவர் பெரியகுளத்தில்டீக் கடை நடத்தியவர், டீ மாஸ்டரும் இவரே).
இவ்வாறு ஒரு பக்கம் உழவர் நலத் திட்டம் அறிவித்த முதல்வர் ஜெயலலிகாவுக்காக அதிமுகவினர் பொதுக் கூட்டம் நடத்திக்கொண்டருந்த அதே நேரத்தில் விவசாயக் கடன் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பது தான்சுவாரஸ்யம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications