மீசையில் மண் இருக்கா?: கராத்தேவின் பேச்சு
சென்னை:
நான் மாநகராட்சி கூட்டத்துக்கு வந்திருந்தால் அமர அறை இல்லை. அதனால் தான் மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லைஎன தலைமறைவு துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
குப்புறக் கவுந்தாலும், மீசையில் மண் ஒட்டலையே என்று வீரம் காட்டுவது மாதிரி பேசியுள்ளார் கராத்தே.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் கடந்த 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தை நடத்த அதிமுக கவுன்சிலர்விஜயராமகிருஷ்ணா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் கலந்து கொள்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. மாறு வேடத்தில் வருவார்என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் திகில் பரப்பிக் கொண்டிருந்தார்கள். அவர் வர மாட்டார் என்று நிச்சயமாக நம்பினாலும்,வந்தாலும் வந்துவிடுவாரோ என்ற சந்தேகத்தில் அவரை அமுக்கிப் பிடிக்க பெரும் போலீஸ் படை மாநகராட்சியில்குவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கராத்தே கூட்டத்துக்கு வரவில்லை. இது குறித்து கராத்தே வழக்கம்போல் அளித்த செல்போன் பேட்டி:
நான் துணை மேயராக சென்னையில் இருந்த போது முடக்கி வைக்கப்பட்டு இருந்தேன். பிரதமரை வரவேற்க போக வேண்டாம்,ஜனாதிபதியை வரவேற்க செல்ல வேண்டாம், மாநகராட்சி பூங்கா திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என்றெல்லாம் என்னிடம்சொல்லப்பட்டது.
நான் இருந்த துணை மேயர் அலுவலகத்தில் தீப்பிடித்தது. இதனால் அந்த அறையை போலீசார் பூட்டி விட்டனர். இன்னும் அதுதிறக்கப்படவில்லை.
நான் மாநகராட்சி கூட்டத்துக்கு வந்திருந்தால் அமர அறை இல்லை. நான் மாறு வேடத்தில் வந்து விட்டதாக கருதிய போலீசார்ஒவ்வொரு அறையாக தேடியுள்ளனர்.
நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்திருந்தால் என்னை கைது செய்திருப்பார்கள். மாநகராட்சி கமிஷனர் துணை மேயரானஎன்னை காலி செய்தார். இப்போது வேறொரு தலைவரை நியமித்து கூட்டத்தை நடத்தியுள்ளார். அடுத்து அவரே மேயர்இருக்கையில் உட்காருவார் என்றார் கராத்தே.
கராத்தேவை நீக்க ஆணையர் கடிதம்:
இந்நிலையில் அலுவலக பணிகளை கவனிக்காமல் நீண்டநாட்களாக தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன் விரைவில்துணை மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். துணைமேயர்பொது மக்கள் தரும் கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார்.கடந்த 2 மாதங்களாக கராத்தே இதில் பங்கேற்கவில்லை.
எனவே கராத்தே தியாகராஜனை துணை மேயர் பதவியில் இருந்து நீக்க அரசை வலியுறுத்தி கடிதம் தயாராகி வருகிறது.மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார் இந்த கடிதத்தை உள்ளாட்சிதுறை செயலாளருக்கு அனுப்ப இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் அவர் துணை மேயர் மாநகராட்சி பணிகள் மற்றும் மக்கள் குறை கேட்பு, மழை வெள்ள நிவாரண பணிகளில்ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் மாநகராட்சி சார்பில் அவருக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு பதில்அனுப்பவில்லை என்றும் 21ம் தேதி மாநகராட்சி கூட்டம் துணை மேயர் இல்லாமல் நடத்தப்பட்டது குறித்தும் அந்த கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த கடிதத்தில் கராத்தே தியாகராஜனுக்கு பதில் புதுதுணை மேயரை தேர்வு செய்ய அரசின் அனுமதிகோரப்பட்டுள்ளது.
அப்படி அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் மாநகராட்சி கூட்டத்தை கமிஷனர் கூட்டுவார். அதில்புது துணை மேயராக விஜய ராமகிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications