அமைதி பேச்சு: கட்சிகளுக்கு ராஜபக்ஷே அழைப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு நடத்துவது தொடர்பாக அரசின் சார்பில் ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக்கட்சிகளும் உதவ வேண்டும் என அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.
இது குறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் அனுரா பிரியதர்ஷனா கூறுகையில்,அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் அதிபருடன்ஆலோசனை நடத்த முன் வர வேண்டும் என்றார்.
புலிகளுடன் மீண்டும் பேச்சு நடத்துவது குறித்து பதவியேற்ற மூன்றே மாதத்தில் பிற கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவேன்தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜபக்ஷே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புலிகளுடன் பேசுவதற்கான அரசுத் தரப்பு செயலகத்தின் தலைவராக ஜான் குணரத்னேவை ராஜபக்ஷே நியமித்துள்ளார். இதன்முன்னாள் தலைவரான ஜெயந்த் தனபாலாவை செயலகத்தின் ஆலோசகராக்கியுள்ளார்.
புலிகளுக்கு எந்தச் சலுகையும் காட்டப்பட மாட்டாது என்று அறிவித்துள்ள ராஜபக்ஷே பேச்சுவார்த்தையை எப்படி மீண்டும்தொடங்குவார் என்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் ரணில் அரசு உறுதியளித்த தமிழர் பகுதி சுயாட்சித் திட்டத்தையும் ஏற்கராஜபக்ஷே மறுத்து வருகிறார்.
அமைச்சர் ராஜினாமா:
இதற்கிடையே பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே இணையமைச்சர் சிரிபதி சூர்யாரச்சசி தனது பதவியை ராஜினாமாசெய்துள்ளார்.
அவருக்கு திறமை மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சித்துறை என்ற துறை ஒதுக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு துறையை நான்கேள்விப்பட்டதே இல்லை என்று கூறி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால், அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஜேவிபியின் நெருக்கடியால் தான் அவர் பதவி விலகியதாகத் தெரிகிறது. வரும்காலங்களில் ராஜபக்ஷேவுக்கு மேலும் பல தொல்லைகள் ஜேவிபியிடம் இருந்து காத்திருக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications