வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: மதுரையில் பாலங்கள் மூழ்கின
மதுரை:
கன மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நகரில் உள்ள வைகை ஆற்றுத் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதையடுத்து வைகை கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறுஎச்சரிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் பெய்து வரும் இடை விடாத மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள்வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் துவாக்குடி ஏரி உள்பட பல ஏரிகள் உடைந்துள்ளன. இதனால் தஞ்சாவூர்-திருச்சி இடையிலான பாலம் நீரில்மூழ்கிவிட்டது.
கோட்டையாற்றின் ஒரு கரை உடைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர், கொல்லாங்குளம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள்தண்ணீர் புகுந்துள்ளது.
தஞ்சாவூர்:
![]() |
திருவாரூர் அருகே பல கண்மாய்கள் நிரம்பி கால்வாய்களை நிறைத்துக் கொண்டு ஓடும் நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. அதேபோல நாகப்பட்டிணம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய நகர்களும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் பெய்யும் கன மழையால் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. கடைகள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துபெரும் நாசம் விளைந்துள்ளது. இங்குள்ள மாங்குளம் உடைந்ததில் 200 வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் பெய்யும் கனத்த மழையால் அமராவதி ஆற்றின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார்ஆயிரம் குடிசை வீடுகளை ஆற்று நீர் அடித்துச் சென்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர். செந்தூரை ஆகிய பகுதிகளும் மழையால் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன. பொன்னேரி ஏரி உடைந்தால் வெளியேறிய நீரால் சாலைகள் அரிக்கப்பட்டதால்ஜெயங்கொண்டம்-கும்பகோணம் இடையிலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
திருச்சி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூரில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா நெல்கடந்த 5 நாட்களாக வெள்ள நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் கவலையில்ஆழ்ந்துள்ளனர்.
மதுரை:
![]() |
மதுரையில் வைகை ஆற்றுக்குக் குறுக்கே உள்ள தரைப் பாலங்கள் நீரில் மூழ்கிவிட்டதால், மேம்பாலங்களில் பெரும்போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. கூடல் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இங்கு பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மதுரையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
வைகை ஆற்று நீர் பல பகுதிகளில் புக வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அதே போல திண்டுக்கல்லிலும் கன மழையால் ஏரிகள், குளங்கள் உடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பழனி சென்ற இரு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுவிட்டன.
விருதாச்சலம்:
விருதாச்சலத்தில் பெய்யும் கன மழையால் மணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு மணவாளநகருக்குள்தண்ணீர் புகுந்து வீடுகளை மூழ்கடித்துவிட்டது. நல்லூர் கிராமத்துக்குள் நீர் புகுந்து ஆயிரக்கணக்கான குடிசைகள் நீரில்மூழ்கிவிட்டன.
அதே போல வடலூர்-நெய்வேலி சாலையின் பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை-திருச்சி சாலையிலும் பலஇடங்கள் அரிக்கப்பட்டுள்ளதால் அவை பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு வழியாக சுமார் 100 கி.மீ. சுற்றிக் கெண்டு செல்கின்றன.
விருதாலம் நகர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications