தண்டவாளங்கள், சாலைகள் மூழ்கின: ரயில் போக்குவரத்து பாதிப்பு- பஸ்களும் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக ஆங்காங்கே தண்டவாளங்கள் நீரில் மூழ்கிவிட்டன. மேலும் பல இடங்களில்நிலச் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் மண், பாறைகளால் மூடப்பட்டுள்ளன.

இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகளும்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பஸ் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைரோடு- அம்பாசமுத்திரம் இடையே பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால் வைகை எக்ஸ்பிரஸ்,சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்டதென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் பாதி வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன.

திருவனந்தபுரம்-சென்னை, மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சி-சென்னை ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்,சென்னை-தென்காசி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகியவை அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில்நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

ரயில் எப்போது புறப்படும் என்று தெரியாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான பயணிகள் இறங்கிச்சென்றுவிட்டனர். பல ரயில்கள் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் அந்த ரயில் நிலையம் நள்ளிரவில் மக்கள்கூட்டத்தில் தத்தளித்தது.

அதே போல திருச்சி அருகே கடூருக்கும் புள்ளம்பாடிக்கும் இடையே ரயில் தண்டவாளம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. இதனால் திருச்சி-சென்னை இடையிலான பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகியவை பாதி வழியில் நிற்கின்றன.

நள்ளிரவு 1.05 மணியளவில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை திருச்சி ரயில்வே கண்காணிப்புப் பிரிவு ஊழியர்கள்கண்டுபிடித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர். இதனால் ரயில்கள் நிறுத்தப்பட்டு பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது.

அதே போல கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஓடுவதாலும், சாலைகள் நீரில் மூழ்கிவிட்டதாலும்பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ்,கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாலை 6.30 மணிக்கு மேல் புறப்படவேண்டிய ரயில்கள் திட்டமிட்டபடி புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் செல்ல வேண்டிய பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் சூலூர்பேட்டை மற்றும் நாயுடுபேட்டை துரைவாரி சத்திரம் ஆகிய ரயில்தண்டவாளங்களில் அளவுக்கு அதிகமான வெள்ளம் செல்கிறது.

மழை வெள்ளம் அபாய கட்டத்தையும் தாண்டி செல்வதால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது.இதனால் சென்னைக்கு வந்து சேர வேண்டிய ரயில்கள் கால தாமதமாக வருகின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் புறப்பட்டு செல்ல வேண்டியகோரமண்டல், நவஜீவன்,எர்ணாகுளம்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ்கள் 2 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை-நெல்லூர் மின்சார ரயில்கள்ரத்து செய்யப்பட்டன.

மேலும் ஆந்திராவில் பெய்துவரும் கன மழையால் வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள்காலதாமதமாக வந்து கொண்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+