வீராணம் வெள்ளத்தில் சிக்கிய பஸ் பயணிகள்: 8 மணி நேரம் போராடி 129 பேர் மீட்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 3 பஸ்களில் இருந்த 120 பயணிகளை தீயணைப்புப் படையினரும் பொது மக்களும்படகுகளில் சென்று காப்பாற்றினர்.

சென்னை கும்பகோணம் இடையிலான சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இந்த மூன்று பஸ்களும் சிக்கிக் கொண்டன.வீராணம் ஏரியின் ஒரு கரையில் இருந்து உடைத்துக் கொண்டு கிளம்பிய நீர் திடீரென சாலையை மூடியது.

நீர் மட்டம் மளமளவென உயர்ந்துவிடவே, அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்த 3 பஸ்களும் நீரில் மூழ்க ஆரம்பித்தன.பஸ்களால் நீரை மீறிச் செல்ல முடியவில்லை. இதனால் பயணிகள் பயத்தில் அலறினர்.

இதையடுத்து அப் பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தந்தனர். மேலும்மரங்களுக்கும் தங்களுக்கும் இடையே கயிறுகளைக் கட்டிக் கொண்டு சில வாலிபர்கள் பஸ்களை நெருங்கி அதிலிருந்தபயணிகளை வெளியே கொண்டு வந்தனர்.

அவர்கள் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு வெளியே ஆரம்பித்த நிலையில் தீயணைப்புப் படையினர் மிக வேகமாகபடகுகளோடு அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளை படகுகள் மூலம் மிகுந்த சிரமத்துக்கிடையேமீட்டனர்.

சுமார் 8 மணி நேரம் போராடித்தான் இந்தப் பயணிகளை தீயணைப்புப் படையினரால் மீட்க முடிந்தது. அந்த அளவுக்குதண்ணீரில் வேகம் இருநதது.

பஸ்களில் வந்தவர்கள் சாலையின் மீது படகுகளில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீரில் சிக்கிய பஸ்கள் அப்படியேமுக்கால்வாசி மூழ்கிவிட்டன. அவற்றை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+