ஏரிகள் திறப்பு: சென்னைக்குள் நீர் புகும் அபாயம்
சென்னை:
நீர் வரத்து மிக அதிகமாக உள்ளதால் சென்னையைச் சுற்றியுள்ள 4 மாபெரும் ஏரிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் வட சென்னைபகுதிகளில் மீண்டும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், போரூர், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் நிரம்பி இருந்தநிலையில் மீண்டும் கன மழை காரணமாக இந்த 4 ஏரிகளும் திறக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தற்போது புழல் ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. 50.2 அடி கொண்ட புழல் ஏரியில் தற்போது 48.59 அடிதண்ணீர் உள்ளது. இன்னும் 1 அடி தண்ணீர் வந்தால் நிரம்பிவிடும்.
ஆனால் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்னும் 1 அடி வந்தாலே தண்ணீரை திறந்து விட்டு விடுவார்கள். இதற்கு முன்னேற்பாடாகபுழல் ஏரி தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. தண்ணீர் தடையின்றி செல்ல வசதியாகஜேசிபி எந்திரம் கொண்டு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.
அனேகமாக இன்று அல்லது நாளை புழல் ஏரி திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே போரூர் ஏரி நிரம்பிவழிந்ததால் முகலிவாக்கம், மவுலிவாக்கம் பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.
இதே போல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு குன்றத்தூர், மணப்பாக்கம்,சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அடுத்து பூண்டி ஏரியை திறந்துவிட்ட போது ஊத்துக்கோட்டை,பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் பல குடிசைகளை வெள்ளம் சூழ்ந்தது.
சேலையூர் ஏரி நிரம்பி திறக்கப்பட்டதால் சேலையூர்-வேளச்சேரி பகுதி வெள்ளத்தில் மிதந்தது. நந்திவரம் ஏரி, வண்டலூர்ஏரியும் தற்போது நிரம்பி விட்டதால் அங்கும் பல குடிசைகள் மிதக்கின்றன.
இந்த நிலையில் புழல் ஏரி திறந்துவிடப்பட்டால் அந்த தண்ணீர் சாமியார் மடம் தண்டல் கழனி, வடகரை, வடபெரும்பாக்கம்,கொசப்பூர், மணலி, ஆ.முல்லைவாயல், திருவொற்றியூர், கத்திவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் பாய்ந்து வரும் என்பதால்அங்கு முன்னெச்சரிக்கையான மக்களை உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு உடனடியாகநிவாரண உதவிப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா 12 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு அமைச்சரைநியமித்துள்ளார்.
புயல் ஆபத்து நீங்கியது:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் அரபிக்கடலுக்கு நகர்ந்தது. அதனால் சென்னைக்கு ஏற்பட்ட புயல் ஆபத்து நீங்கியது.
வங்கக்கடலில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தாழ்வு நிலையாகதற்போது அரபிக்கடலுக்கு தென் கிழக்கு பகுதிக்கு நகர்ந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம், புதுவை மாநிலங்களுக்கு வெள்ள ஆபத்து நீங்கியது. புயல் நகர்ந்த பிறகும் ஒரு சில இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications