பாராளுமன்ற அமளி: பாஜகவுக்கு கருணாநிதி சூடு
சென்னை:
பாராளுமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் நட்வர் சிங் அகியோர் வோல்கர் அறிக்கை குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்றுதங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதற்கு திமுகதலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது கண்டன அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:பாஜகவினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால் மட்டும் லோல்கர் அறிக்கை விவகாரம் ஒரு முடிவுக்குவரப்போவதில்லை. அவர்கள் பாராளுமன்ற கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதில் எந்த நன்மையும் இல்லை.
மத்திய அரசு வோல்கர் விவகாரத்தை பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கும் என்று பிரதமரின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்,நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளனர்.
அதனால் வோல்கர் விவகாரத்தை பற்றி அமைதியுடன் விவாதிக்க எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதை விடுத்துபாராளுமன்றத்தை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடும் பாஜகவின் செயல் சரியல்ல.
இந்த பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரம் பொய்த்து போனதை இங்கே நினைவு கூர்கிறேன். இதனால் எதாவது ஒருகுற்றச்சாட்டை முன்னிறுத்தி பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு களங்கம் விளைவித்துவிட முடியும் எனபாஜக நினைத்தால் அவர்களுக்கு தோல்வி நிச்சயம்.
பாஜக ஆட்சியின் போது எழுந்த குற்றச்சாட்டில் எந்த அமைச்சராவது ராஜினாமா செய்துள்ளார்களா? பாஜகவினர்நாடாளுமன்றத்தில் இடையூறுகள் செய்து நாட்டின் ஜனநாயகத்தை வீழ்த்தப் பார்க்கிறார்கள்.
பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே பாஜகவின் அமளியால் இன்றும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications