வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்: 88 பேர் பலி
ராமநாதபுரம் - தஞ்சாவூர்:
திருவாடானை அருகே பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 70 பேர் வரை பலியாகிவிட்டனர். அதே போல தஞ்சாவூர்அருகே பஸ் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்ததில் 18 பயணிகள் பலியாகிவிட்டனர்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெய்யும் கன மழை காரணமாக சருகுனி ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. ஜனவேலி என்ற இடத்தில் இந்த ஆறு, கடலில் கலக்கிறது. இந்த இடத்தில் ஒரு பாலம் உள்ளது இந்தப் பாலத்தின்மீதும் வெள்ளம் நிறைந்து ஓடுகிறது.இந் நிலையில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சென்ற பஸ் பகல் 1 மணியளவில் இந்தப் பாலத்தில் மீது சென்றது. அதில்மொத்தம் சுமார் 105 பேர் இருந்தனர். அப்போது காட்டாற்று வெள்ளம் பஸ்ஸை இழுத்துச் சென்றது. பயணிகளோடு அந்த பஸ்நீரில் உருண்டு சென்று கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது.
மூழ்கிய பஸ்சில் இருந்து 15 பேர் வெளியேறி நீந்திக் கரை சேர்ந்தனர். டிரைவர், கண்டக்டரும் நீந்தி வெளியேறிவிட்டனர். மேலும்சிலரை பொது மக்கள் மீட்டனர்.
ஆனால், பஸ் மூழ்கியதில் அதில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் பலியாகிவிட்டனர். இதுவரை பஸ்சுக்குள்ளும்கால்வாய்க்குள்ளும் கிடந்த 20 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இதில் 7 பேர் பெண்கள்.
பஸ்சில் இருந்த பிற பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர். இதில் பல உடல்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 70 வரை இருக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.
மூழ்கிக் கிடக்கும் பேருந்தை மீட்க அதிக சக்தி வாய்ந்த கிரேன்களுடன் தீயணைப்புப் படையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.ஆனால், தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் அந்த முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை.
பட்டுக்கோட்டை: பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி
இதற்கிடையே தஞ்சாவூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த 18 பயணிகள் பலியாகிவிட்டனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மகாராஜா சமுத்திரம் என்ற இடத்தில்வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 80 பேரில் 18 பேர் பலியாகிவிட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய 3 பஸ்கள்:
இதற்கிடையே நேற்று கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 3 பஸ்களில் இருந்த 120 பயணிகளை தீயணைப்புப்படையினரும் பொது மக்களும் படகுகளில் சென்று காப்பாற்றினர்.
சென்னை கும்பகோணம் இடையிலான சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இந்த மூன்று பஸ்களும் சிக்கிக் கொண்டன.வீராணம் ஏரியின் ஒரு கரையில் இருந்து உடைத்துக் கொண்டு கிளம்பிய நீர் திடீரென சாலையை மூடியது.
நீர் மட்டம் மளமளவென உயர்ந்துவிடவே, அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்த 3 பஸ்களும் நீரில் மூழ்க ஆரம்பித்தன.பஸ்களால் நீரை மீறிச் செல்ல முடியவில்லை. இதனால் பயணிகள் பயத்தில் அலறினர்.
இதையடுத்து அப் பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தந்தனர். மேலும்மரங்களுக்கும் தங்களுக்கும் இடையே கயிறுகளைக் கட்டிக் கொண்டு சில வாலிபர்கள் பஸ்களை நெருங்கி அதிலிருந்தபயணிகளை வெளியே கொண்டு வந்தனர்.
அவர்கள் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு வெளியே ஆரம்பித்த நிலையில் தீயணைப்புப் படையினர் மிக வேகமாகபடகுகளோடு அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளை படகுகள் மூலம் மிகுந்த சிரமத்துக்கிடையேமீட்டனர்.
சுமார் 8 மணி நேரம் போராடித்தான் இந்தப் பயணிகளை தீயணைப்புப் படையினரால் மீட்க முடிந்தது. அந்த அளவுக்குதண்ணீரில் வேகம் இருநதது.
பஸ்களில் வந்தவர்கள் சாலையின் மீது படகுகளில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீரில் சிக்கிய பஸ்கள் அப்படியேமுக்கால்வாசி மூழ்கிவிட்டன. அவற்றை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications