மதுரைக்குள் வைகை வெள்ளம்: வீடுகளுக்குள் தண்ணீர்
மதுரை:
![]() |
திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி பகுதியில் கண்மாய் உடைந்து வெளியேறிய நீரில் எஸ்.ஆர்.வி. நகர்,கலைவாணர் நகர், சுப்பிரமணியர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓபுளாபடித்துறை, அருள்தாஸ்புரம், கல்பாலம் (கீழ்பாலம்) ஆகிய தரைப்பாலங்கள்தண்ணீரில் முழ்கிவிட்டன. இதனால் வைகை ஆற்றுக்கு குறுக்கே மதுரையின் வடக்குப் பகுதியையும் தெற்குப் பகுதியையும்இணைக்கும் 2 மேம்பாலங்களில் மட்டுமே போக்குவரத்து நடக்கிறது.
கரிசல்குளத்தில் இருந்து வந்த தண்ணீர் கூடல் புதூர், ஆனையூர் கண்மாய்க்குள்ளும் பாய்ந்தது. இந்த நீர் கூடல் புதூரில் உள்ளரயிலார் நகரில் வீடுகளுக்குள் புகுந்தது.
மதுரை நகரில் செல்லூரும், நரிமேடு பகுதியும், மருதுபாண்டியன் நகரும், கட்டபொம்மன் நகரும் தான் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதையடுத்து செல்லூர் எல்ஐசிஅலுவலகம் அருகே ரோட்டை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடைத்து தண்ணீரை வைகை ஆற்றுக்குள்திருப்பிவிட்டனர்.
அதே போல சொக்கலிங்க நகர், மாட்டுத்தாவணி, சங்கர் நகர், அரசு பஸ் டெப்போ ஆகியவற்றிலும், சம்பக்குளம் நிரம்பிபரவையில் உள்ள வீடுகள், தனியார் கல்லூரி ஆகியவற்றில் நீர் புகுந்தது.
ஆணையூர் கண்மாய் நிரம்பி அந்த நீர் செல்லூர் கண்மாயை நிறைத்தது. இதன் பின்னர் செல்லூர் கண்மாயில் இருந்து வெளியேறியநீர் செல்லூர், கட்டபொம்மன்நகர், அய்யனார்கோவில் தெரு, குலமங்கலம் ரோடு, மீனாட்சிபுரம் போன்ற ஆகிய பகுதிகளுக்குள்புகுந்தது.
இங்கு ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இங்குள்ள மக்கள் மாபெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.
உசிலம்பட்டியில் ஒரே நாளில் 125.2 மி.மீ. மழை பெய்தது. இதில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வடக்கம்பட்டிதுண்டிக்கப்பட்டுள்ளது. கருமாத்தூர் உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அதே போல டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருப்பாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையினால் பல கண்மாய்கள்உடைந்து சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஜனவள்ளி கிராமத்தில் ஆற்று பாலத்தில் பஸ் கவிழ்ததில் 14 பேர் பலியாகிஉள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கனமழையால் மதகுபட்டி, அழகமநேரி-நாமனூர், அலவாக்கோட்டை-நாமனூர் ரோட்டில் தண்ணீர்பெருக்கெடுத்தது சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளழ.
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலினுள் தண்ணீர் புகுந்துள்ளது. இங்குள்ள மருதுபாண்டியர் சிலை பகுதியிலும்தண்ணீர் புகுந்தது.
காளையார்கோவில் அருகே வாணியங்குடி, உடைவயல், மாங்காட்டுபட்டி, பனங்குடி உட்பட 80 கண்மாய்கள்உடைப்பபெடுத்துள்ளன. இதனால் பாகனேரி, கோவில்பட்டி, சிறுவேலன்குடி, வன்னிக்குடி, பெருவேலங்குடி, கீரனூர் ஆகியபகுதிகளில் பல கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன.
தேவகோட்டையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு விருசுழியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கே.பி.கே.நகர்ர் உள்ளிட்டபகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
காரைக்குடி அருகே கல்லல், தண்ணீர் பந்தல், புதுவெட்டி ஆகிய கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மதுரை பஸ்கள்தேவகோட்டை ரஸ்தா, மானகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. காரைக்குடியில் சிவன் கோயில், கீழ ஊரணி,கொப்புடையம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில் ஊரணிகள் நிரம்பிவிட்டன.
ஹெலிகாப்டர் விரைந்தது:
பரமகுடி அருகே வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டர் விரைந்துள்ளது.
குமரக்குறிச்சி அருகே பாலத்தைக் கடக்க முயன்ற ஒரு தம்பதி உள்ளிட்ட மூன்று பேரை ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றது.அவர்கள் தட்டுத்தடுமாறு ஆற்றில் உள்ள குடிநீர்த் தொட்டியின் ஏணியைப் பிடித்து தப்பினர். இதையடுத்து தொட்டியின் மீது ஏறிநின்று உதவி கேட்டு வருகின்றனர்.
இவர்களை மீட்க தீயணைப்புப் படையினரால் முடியவில்லை. இதையடுத்து ராணுவத்துக்குத் தகவல் தரப்பட்டு, ராமேஸ்வரம்மண்டபத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இவர்களை மீட்க விரைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications