நெல்லையில் கடும் மழை: அரிசி ஆலை இடிந்து விழுந்தது

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த பலத்த மழையில் அந்த பகுதியில் அரிசி ஆலை இடிந்து விழுந்தது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால் ஆற்றங்கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

மாநகரின் அனைத்து சாலைகளுமே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. எற்கனவே பாதாள சாக்கடை பணிக்காகதோண்டப்பட்ட குழிகளால் நெல்லை நகரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடர் மழையால் சாலைபோக்குவரத்து மிகவும் மோசமாக உள்ளன.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள ஒரு அரிசி ஆலை இடிந்து விழுந்தது. ஆலைமூடியிருந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் ஆலையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள்சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக உப்பளப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல லட்சரூபாய் சேதமடைந்துள்ளது. மீனவர்கள் 4வது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

தமிழ்நாட்டில் பெய்து வரும் பலத்த மழையினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் கொடை சாலையில்ராட்சச பாறை சரிந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. திருமங்கலத்தில் தண்டவாளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திருச்சி மாவட்டம் புள்ளம் பாடி-காட்டூர் இடையேயான ரயில் பாலம் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரிஎக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மதுரைக்கும்-திருச்சிக்கும் இடையே நிறுத்தப்பட்டன.

நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் நாகர்கோவில் இருந்து கோவை செல்லும் ரயில் ஆகியவை மதுரை வரை சென்றன.நாகர்கோவிலில் இருந்து திருப்பதி வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.

விருதுநகர்:

விருது நகரில் கவுசிகா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மின் உப மின் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது.டிரான்ஸ்பார்மர்கள் நிறுத்தப்பட்டதால் நேற்று பகல் முழுதும் விருது நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து வெள்ளநீர் வடியாததால் டிரான்ஸ்பார்மர்களை இயக்க மின் ஊழியர்கள் வரவில்லை. அதனால் தொழிற்சாலைகள்இயங்கவில்லை. பிறகு வெள்ளநீர் இன்று காலை வடிந்த பிறகு மின் சப்ளை தரப்பட்டது.

குமரி மாவட்டம்:

குமரிமாவட்டம், நாகர்கோவில், சுருளோடு, ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டேஇருந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவளம், குளச்சல், சின்னமூட்டம், இரையுமன் துறை, ராமன்துறை போன்ற கடலோர பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

நாகர்கோவிலில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வடசேரி பஸ் நிலையம் முழுவதும்தண்ணீரால் சூழப்பட்டு குளமாக மாறியது. ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பிசாலையில் வெள்ளமாக ஓடியது. மழையை தொடர்ந்து காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+