ராமதாஸ்-திருமாவிற்கு பாரதிராஜா கண்டனம்
சென்னை:
குஷ்பு- சுஹாசினி விவகாரத்தில் ராமதாஸ்-திருமாவளவனுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
செக்ஸ் குறித்த குஷ்பு கருத்தை நியாயப்படுத்தி சுஹாசினி பேசும் போது அதே மேடையில் இயக்குனர் பாரதிராஜாவும் இருந்தார்.அப்போது சுஹாசினியின் பேச்சை அவர் எதிர்க்காததற்காக பலர் கண்டித்தனர்.இது பற்றி பாரதிராஜா கூறியதாவது:
கற்பு பற்றி ஒரு பெண் சொன்ன கருத்தை பெரிதாக்கி விட்டார்கள். என்னிடம் கேட்டிருந்தால் கிழித்திருப்பேன் என்று சஹாசினிசொன்னதற்கு, பதில் சொல்லி இருப்பேன் என்று தான் அர்த்தம். தமிழர்களுக்கு கொம்பு முளைத்துள்ளதா? என்று அவர் கேட்டதைகூட கொம்பெல்லாம் முளைக்கவில்லை என்று தான் எடுத்துக் கொண்டேன்.
சுஹாசினிக்கு தமிழர்கள் சார்பில் பேச உரிமை இல்லை என்கிறார்கள். அப்படி சொல்பவர்களுக்கு போராட தமிழர்கள் சார்பில்யார் உரிமை கொடுத்தார்கள்.
குஷ்பு, சுஹாசினியை எதிர்த்து செருப்பு, துடைப்பம் காட்டி போராட்டம் நடத்துவது தமிழ் கலாச்சாரமா? பாமக, விடுதலைசிறுத்தைகள் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராடுவதில் உள் நோக்கம் உள்ளது.
பெரியார் சொல்லாததை ஒன்றும் குஷ்புவும், சுஹாசினியும் சொல்லவில்லை. பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டுமென்றால்கற்பு என்ற சங்கிலியால் அவர்களை கட்டிப்போட்டிருப்பதை உடைக்க வேண்டும் என்றார் பெரியார்.
பெரியார் போல பதவி ஆசை இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. ராமதாஸ், திருமாவளவன் மீது மரியாதைவைத்திருந்தேன். தமிழ் அடையாளங்களை மீட்டு எடுக்க சொன்னேன். ஆனால் அவர்கள் சினிமாக்காரர்களையே சுற்றிவருகிறார்கள். நடிகர்களிடம் அவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது.
நடிகர்களை தாக்கினால் விளம்பரம் கிடைக்கும் என்று இது போன்ற காரியங்களை செய்கிறார்கள். குஷ்பு, சுஹாசினிபிரச்சினையில் விஜயகாந்த் இதுவரை வாய்திறக்கவில்லை. அவர் அரசியல்வாதி ஆகிவிட்டதால் தனது கருத்தை சொல்வதுஅவசியம் என்றார்.
சுகா மீது இன்னொரு வழக்கு:
இந்த நிலையில் நடிகை சுஹாசினி மீது திருப்பூர் 32வது வார்டு பாமக கிளை பொருளாளர் அமிர்தவல்லி என்பவர் திருப்பூர்ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி பகவதியம்மாள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை சுஹாசினியைஅடுத்த மாதம் 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சுஹாசினிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications