சென்னை- தென் மாவட்ட ரயில்கள் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பெரும்பாலான ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.திருச்சி-விழுப்புரம் பகுதியில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டதாலும், மற்றும் அம்பாதுரை-கொடைரோட்டில்தண்டவாளங்களில் நிலச்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதாலும் அந்தப் பாதைகளில் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.

இன்று ரத்தாகியுள்ள சென்னை ரயில்கள்:

இதனால் சென்னையில் இருந்து புறப்படும் 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:

சென்னை-எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-வைகை எக்ஸ்பிரஸ்,எழும்பூர்-முத்துநகர் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-கோவைஎக்ஸ்பிரஸ், தஞ்சை-கோவை எக்ஸ்பிரஸ்,

சென்னை எழும்பூர்-தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர்-அனந்தபுரி எக்ஸ்பிரஸ்,திருச்சி-எர்ணாகுளம்-திருச்சி எக்ஸ்பிரஸ், மதுரை-ஈரோடு லிங்க், சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில்,

தாம்பரம்-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்,தாம்பரம்-மயிலாடுதுறை பாஸஞ்சர், கோவை- மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளையும் ரத்தாகும் ரயில்கள்:

சென்னை எழும்பூர்- திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்-கோவை ஜனசகாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்களும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதி வழியில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

சென்னை எழும்பூர்-குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.திருச்சி-ஹவுரா திருச்சிக்கும் எழும்பூருக்கும் இடையிலும், தஞ்சாவூர்-மைசூர்-தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் ஈரோடுக்குஇடையிலும் நிறுத்தப்பட்டு அத்தோடு ரத்தும் செய்யப்பட்டுள்ளன.

மைசூர்-தூத்துக்குடி-மைசூர் ரயில் ஈரோடு, மதுரைக்கு இடையிலும், மங்களூர்-திருச்சி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ஈரோடு- திருச்சிக்குமத்தியிலும், தாம்பரம்-மயிலாடுதுறை-சோழன் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் மயிலாடுதுறை இடையிலும் நிறுத்தப்பட்டு ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள்:

கோவை-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் கரூரில் இருந்து சென்னைக்கு ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோணம், சென்னைகடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.

திருநெல்வேலி- சென்னை எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம், எர்ணாகுளம், சோரனூர் வழியாக சென்னை வந்தடையும்.

சென்டிரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சோரனூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாகவும், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஷோரனூர், ஈரோடு வழியாகவும் மாற்றுப் பாதையில் செல்லும்.

இன்று சென்னை வந்து சேர வேண்டிய நிஜாமுதின்- மதுரை தமிழ்நாடு சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சோரனூர், எர்ணாகுளம்,திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக திருநெல்வேலிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

இத் தகவலை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+